ஸ்கூட்டரில் மகனிடம் பேசிட்டிருந்த அம்மா.. திடீர்னு அரிவாளுடன் 3 பேர்.. நொடியில் தெறிக்கவிட்ட தாய்
மும்பை: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் தந்துவிட்டது.. யாரிந்த பெண் என்று தெரியவில்லை.. ஆனால், ஏகப்பட்ட பாராட்டுகளை இந்த தாய்க்கு நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். என்ன நடந்தது?
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் ஜெய்சிங்பூர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்த கேமராவிலும் இந்த சம்பவம் பதிவாகியிருக்கிறது.

இளைஞர்: இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் உட்கார்ந்துக்கொண்டே, அருகில் நிற்கும் தன்னுடைய அம்மாவிடம் பேசி கொண்டிருக்கிறார்.. அப்பொழுது திடீரென பைக்கில் 3 பேர் வருகிறார்கள்.. தாய்-மகன் இருவரிடமும் 3 பேரும் நெருங்கி வருகிறார்கள்.
3 பேரில் ஒருவர், பின்னாலிருந்து நீளமான அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து, ஸ்கூட்டரில் உட்கார்ந்திருந்த இளைஞரை தாக்குகிறார்.. தன் மகனை அரிவாளால் வெட்டுவதை கண்ணெதிரே பார்த்து அலறிய தாய், கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கியவர்களை விடாமல் விரட்டுகிறார். கற்களை எடுத்து, அவர்கள் மீது வாரி வாரி ஆவேசத்துடன் இறைக்கிறார்.. அதற்குள் ஸ்கூட்டரிலிருந்து மகனும், சுதாரித்து கொண்டு உயிர் தப்பிவிடுகிறார்.
துணிச்சல்: வழக்கமாக, அரிவாள், கத்திகளுடன் கொலை செய்ய வருபவர்களை கண்டால் யாராக இருந்தாலும் அங்கிருந்து தலைதெறித்து ஓடிவிடுவார்கள்.. அதேபோல, கொலையாளிகளும், ஒருகணம்கூட வீணாக்காமல், தங்கள் எதிரிகளை கண்மண் தெரியாமல் வெட்டி சாய்த்து விடுவார்கள்..
ஆனால், அத்தனை பயங்கர ஆயுதங்களை கண்டும் அஞ்சி ஓடிவிடாமல், தன் மகனை தாக்குகிறவர்களை துணிந்து எதிர்க்க முயல்கிறார் இந்த பெண். இத்தனைக்கும் தன் கையில் எந்தவிதமான ஆயுதமும் இல்லாமல், வெறுமனே கீழே கிடந்த் கற்களை எடுத்து அடித்து ஓட ஓட விரட்டியடிக்கிறார்.
தப்பி ஓட்டம்: அந்தம்மா, கற்களை கொண்டு வீசுவதை 3 பேருமே எதிர்பார்க்கவில்லை.. இதனால், உயிர் தப்பினால்போதும் என்று 3 பேருமே அங்கிருந்து தலைதெறித்து தெறித்து ஓடுகிறார்கள்.
மகனை தாக்க வந்தவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இந்த தாயின் துணிச்சல்தான், சோஷியல் மீடியாவில் பாராட்டப்பட்டு வருகிறது.. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசாரின் பார்வைக்கும் சென்றுள்ளது.. தாக்கப்பட்ட நபர் சுனில் ராமப்பா லமணி என்று தெரிய வந்துள்ளது. அவரது தந்த புகாரின் பேரில், வினோத் காசு பவார், அரவிந்த் காசு பவார் மற்றும் வினோத் பாபு ஜாதவ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications