நாட்டையே உலுக்கிய மகன்.. அம்மாவின் கல்லீரல், சிறுநீரகம், மூளையை வறுத்து சாப்பிட்டு.. ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவையே ஒரே நாளில் உலுக்கி எடுத்த இளைஞர் சுனிலை நினைவிருக்கிறதா? இவரது வழக்கில் மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.. தன்னுடைய தண்டனையை எதிர்த்து அப்பீலுக்கு போன நிலையில், அவரது மரண தண்டனையை கோர்ட் உறுதி செய்திருக்கிறது.

கடந்த 2017-ல் இந்த சம்பவம் நடந்தது.. மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்.. இவருக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது.. எந்நேரமும் போதையில் இருப்பவர். கடந்த இவர் 2017, ஆகஸ்ட் 28ம் தேதியன்று, தன்னுடைய 63 வயதான அம்மா ரமா குச்கொரவியிடம், மது குடிக்க காசு கேட்டுள்ளார்..

bombay high court

மதுபோதை: அதற்கு அவரது அம்மா ரமா மறுத்துள்ளார்.. தன்னிடம் காசு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.. இதனால், ஆத்திரமடைந்த மகன் சுனில், அம்மாவை ஆவேசத்துடன் கொலை செய்தார்.. கண்ணெதிரே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார் அந்த பெண்.

அப்போதுகூட ஆத்திரம் தீராத சுனில், சடலத்தின் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு, உடல் பாகங்களை ஒவ்வொன்றாக வெட்டினார்.. அதுமட்டுமல்ல, தாயின் சிறுநீரகம், மூளை, இதயம், கல்லீரல் , நுரையீரல் என ஒவ்வொரு பாகத்தையும் வெட்டி, அடுப்பில் வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி, வறுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

தண்டனை: இந்த சம்பவம் நாட்டையே அன்றைய தினம் உலுக்கி எடுத்துவிட்டது.. மது குடிக்க, பணம் கொடுக்காததால், இப்படி கொலையைச் செய்ததாக போலீசில் வாக்குமூலம் தந்தார் சுனில்.. இதையடுத்து, போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்... கடந்த 2021ஆம் ஆண்டு சுனிலுக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது... எனவே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் சுனில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கினை நேற்று நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.. அப்போது, "இந்த வழக்கு அரிதான வகையின்கீழ் வருகிறது..

அதிர்ந்த நீதிமன்றம்: குற்றவாளி தன்னுடைய அம்மாவை கொன்றுவிட்டு, அவரது உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து, அவற்றை சட்டியில் எண்ணெய் ஊற்றி சமைத்திருக்கிறார்... இது நரமாமிசம் சாப்பிட்டு உள்ளதை காட்டுகிறது.. நாங்கள் இதைவிட ஒரு கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை இதுவரை சந்தித்ததில்லை. சுனிலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்...

இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால், சிறையிலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவார்.. இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அத்துடன், கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை, உறுதிசெய்த மும்பை ஹைகோர்ட், இதை எதிர்த்து சுனில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+