வெள்ளை ஆடுகளுக்கு மத்தியில் கருப்பு ஆடு.. ஆனந்த் மகிந்திரா என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க
மும்பை: நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்று தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவு இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. வெள்ளை ஆடுகளுக்கு மத்தியில் கருப்பு ஆடு படத்தை பகிர்ந்து ஆனந்த் மகிந்திரா, திங்கள் கிழமை மோட்டிவேஷன் பதிவாக போட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கமெண்ட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.
நாடறிந்த தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்க கூடியவர். வாகன உற்பபத்தி, வங்கி என இந்தியாவில் பல தொழில்களில் கோலோச்சி வரும் ஆனந்த் மகிந்திரா, தன் மகிந்திரா குழுமத்தின் தலைவராக இருந்தாலும் கூட தனது ஓய்வு நேரத்தில் எக்ஸ் தளத்தில் தனக்கு பிடித்த விஷயங்கள், துணுக்குகள், சுவாரசிய தகவல்கள் என பல விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அதேபோல நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விக்கு கூட சுவாரசியமான பல கருத்துக்களை பதிவிடுவதை பார்க்க முடியும். எக்ஸ் தளத்தில் தனக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லும் அளவுக்கு அவரது பதிவுகள் அனைத்தும் வைரல் ஹிட் ஆகும். திங்கள் கிழமைகள் தோறும் மோட்டிவேஷன் பதிவுகளை ஆனந்த் மகிந்திரா பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், இன்றும் ஆனந்த் மகிந்திரா ஒரு ட்விட் ஒன்றை போட்டார். இது வழக்கமான பதிவு என்றாலும் கூட இன்று ஆனந்த் மகிந்திர வெளியிட்ட வெள்ளை ஆடு, கருப்பு ஆடு பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரவியது. கும்பலாக நிற்கும் வெள்ளை ஆடுகளுக்கு மத்தியில் ஒரு கருப்பு ஆடு ஒன்று நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
அதனுடன் வெளியிட்டு இருந்த பதிவில், கருப்பு ஆடு என்ற வார்த்தை எதிர்மறையான வழியில் தனித்து நிற்கும் ஒருவரை அவமானப்படுத்தும் விதமாக பயன்படுத்தப்படும். ஆனால், கூட்டத்தில் தனித்து நிற்கும் ஒருவரை பார்க்க மற்றொரு வழியும் உள்ளது. தனித்துவமான நபர், மாவீரன், விதிகளை உடைத்து வித்தியாசமாக சிந்திக்க கூடியவர் என்றும் சொல்வார்கள்.

எனவே வித்தியாசமாக இருக்க அச்சப்பட வேண்டாம்" என்று ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் டெஸ்லாவுடன் போட்டி போட போவதை ஆனந்த் மகிந்திரா குறிப்பிடுகிறாரா? என்றும் பதிவிட்டு இருக்கிறார்க்ள். சிலர், ஆனந்த் மகிந்திராவின் சிறந்த மோட்டிவேஷன் பதிவு எனவும் கூறியுள்ளார். நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியிலும் பதிவிட்டு வருகிறார்கள்.
முன்னதாக இரு தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை வாழ்த்தும் விதமாக பதிவிட்டு இருந்தார். ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட பதிவில், "காஷ் படேல், எப்.பி.ஐ-யின் புதிய இயக்குநர். இவர்கிட்ட வச்சுக்க முடியாது போல. கவனமாக இருக்க வேண்டும் போல.. என பதிவிட்டு இருந்தார். அதற்கு சில நெட்டிசன்கள் இவருக்கு ஒரு தார் காரை பரிசாக கொடுங்கள் என பதிவிட்டு இருந்தனர். அதற்கும் பதிலளித்த ஆனந்த் மகிந்திரா, இவர் தார் விருதுக்கு தகுதியானவராக தெரிகிறார்" என்று பதிவிட்டு இருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications