அர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு
மும்பை: ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் ஓவாலா-மைஜ்வாடா சட்டசபை தொகுதியின் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக்தான், அர்னாப் கோஸ்வாமி மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். மேலும் உள்கட்டமைப்பு வல்லுநர் அன்வய் நாயக் தற்கொலை தொடர்பான விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அன்வய் நாயக் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரித்த மகாரஷ்டிரா போலீசார் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருவார காலம் அர்னாப் கோஸ்வாமி சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் அர்னாப் கோஸ்வாமி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் பிரதாப் சர்நாயக்குக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 10 இடங்களில் அமலாக்கப் பிரிவினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பிரதாப் சர்நாயக்குக்கு சொந்தமான Tops Group நிறுவனமும் சோதனைக்குள்ளானது. பிரதாப் சர்நாயக் மகனும் அமலாக்கப் பிரிவு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அமலாக்கப் பிரிவின் இந்த சோதனைகளுக்கு சிவசேனா கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஏவிவிடப்படுகின்றன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications