Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“படேங்கே தோ கதேங்கே".. பாஜக எழுப்பிய 2 கோஷம்.. மகாராஷ்டிரா தேர்தல் ரிசல்ட்டே மொத்தமா மாறிப்போச்சு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: "படேங்கே தோ கதேங்கே", "ஏக் ஹை தோ சேஃப் ஹை" என பாஜக தலைவர்கள் முன்வைத்த முழக்கங்கள், மகாராஷ்டிர அரசியலில் அக்கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளதாக கருதப்படுகிறது. மொத்தம் 145 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 133 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மஹா விகாஸ் அகாடி ஆகிய இரு கூட்டணிகள் களம் கண்டன. இந்த 2 கூட்டணிகள் மட்டுமல்லாது, பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) கட்சி 17 வேட்பாளர்களையும் நிறுத்தி தனித்து போட்டியிட்டன.

maharashtra assembly election 2024 maharashtra bjp 2024

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், ஆரம்பம் முதலே மஹாயுதி கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. தற்போது 231 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இருக்கிறது.

இதில் பாஜக மட்டுமே தனியாக 133 தொகுதியில் வென்று இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று உள்ளது பாஜக. சிவசேனா (ஷிண்டே) 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி மொத்தமே 45 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு மஹாயுதி கூட்டணி அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1500 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தது. இத்திட்டம் உடனே அமல்படுத்தப்பட்டது. 2.4 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1500 வரவு வைக்கப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொகை 2100 ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது பாஜக கூட்டணி.

மகாராஷ்டிராவில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "படேங்கே தோ கதேங்கே" (Batenge Toh Katenge - பிரிந்திருந்தால் அழிக்​கப்​படு​வோம்) என பேசியது சர்ச்சையை கிளப்பியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, "ஏக் ஹை தோ சேஃப் ஹை" (Ek hai to safe hai - ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என முழக்கம் வைத்தார்.

இந்துக்களை வாக்கு ரீதியாக ஒண்றிணைக்க சிறுபான்மையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்த கோஷங்களை மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அஜித் பவாரின் தேசிய​வாத காங்கிரஸ் கட்சியும் இதனை ஆதரவிக்கவில்லை. "நான் அதை ஆதரிக்கவில்லை. மகாராஷ்டிராவில் இது வேலை செய்யாது. இது உத்தர பிரதேசம், ஜார்கண்ட் அல்லது வேறு சில இடங்களில் வேலை செய்யக்கூடும்." என்றார்.

அதேபோல, ஷிண்டே சிவசேனா தரப்பும் இதை ரசிக்கவில்லை. சிறுபான்மை ஓட்டுகளை ஈர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த ஷிண்டேவும் இந்த முழக்கத்தால் தமக்கு பாதிப்பு எனக் கருதினார். இதனால் கூட்டணிகளுக்குள்ளே சலசலப்பு ஏற்பட்டது. இதனை குறிவைத்து மகாவிகாஸ் அகாதியும், பாஜக கூட்டணிக்குள் குழப்பம் என விமர்சித்தது.

எனினும், "படேங்கே தோ கதேங்கே" ( பிரிந்திருந்தால் அழிக்​கப்​படு​வோம்), "ஏக் ஹை தோ சேஃப் ஹை" (ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என்ற இந்த முழக்கங்கள், மகாராஷ்டிரா மாநில மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது பாஜக.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+