மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20 ஆண்டு மர்மம்.. என் வாயை திறந்தால் “பூகம்பம்” வெடிக்கும்! உத்தவை மிரட்டும் ஏக்நாத் ஷிண்டே

Google Oneindia Tamil News

மும்பை: தான் மட்டும் நேர்காணல்களில் பேசத் தொடங்கினால் பெரும் பூகம்பம் வெடிக்கும் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு பதவியேற்ற சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில மாலேகானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுக விமர்சனங்களை முன்வைத்தார்.

நில மோசடி வழக்கு: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது நில மோசடி வழக்கு: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது

பூகம்பம் வெடிக்கும்

பூகம்பம் வெடிக்கும்

அவராற்றிய உரையில், "சில நபர்களைபோல் நான் விடுமுறை நாட்களில் எப்போதும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்பவன் கிடையாது. சிவசேனா கட்சி மற்றும் அதன் வளர்ச்சி குறித்தே நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் பேட்டிகளை அளித்து பேசத் தொடங்கினால் பூகம்பமே வெடிக்கும்.

அடுத்த தேர்தல்

அடுத்த தேர்தல்

சிவசேனா கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுவிட்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தது துரோகம் இல்லையா? என் தலைமையிலான சிவசேனா கட்சி பாஜகவுடன் இணைந்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெல்வோம்." என்றார்.

நானே சாட்சி

நானே சாட்சி

கடந்த 2002 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் திகேவை சுட்டிக்காட்டிய ஷிண்டே, "திகேவுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். நான்தான் அதற்கு சாட்சி." என்று கூறினார். கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் குஜராத், அசாம் மாநிலங்களில் உள்ள விடுதிகளில் தங்கி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

 மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு

மகாராஷ்டிரா ஆட்சி கவிழ்ப்பு

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பாகவே உத்தவ் தாக்கரே பதவி விலகுவதாக அறிவித்தார். முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார். இந்த நிலையில் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Eknath Shinde threatens Uddhav Thackarey on that know shivsena secrets: தான் மட்டும் நேர்காணல்களில் பேசத் தொடங்கினால் பெரும் பூகம்பம் வெடிக்கும் என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X