ஆமை புகுந்த வீடான அதிமுக.. ஆசை காட்டி மோசம் செய்த லீமா? வேதனையில் வேலுமணி.. ரெடியான சிவி சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உருவான உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து சில முக்கிய தலைவர்கள் தனி அணியாக செயல்பட தொடங்கினர். ஆனால் எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இந்நிலையில் வேலுமணி தரப்பிலிருந்து 8 எம்எல்ஏக்கள் சைலன்டாக எடப்பாடி தரப்புக்கு தாவி விட்டார்களாம். ஆனால் கட்சிப் பதவி தர முடியாது என எடப்பாடி கூறிவிட்டார். இதனால் அவர்களுக்கு கூடுதல் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

AIADMK

இந்த நிலையில் ஓபிஎஸ்ஐ போல பொது குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பறிக்க சிவி சண்முகம் காய் நகர்த்தி வருகிறார் என்கிறனர். இந்த நிலையில், அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த லீமா ரோஸ் தான் காரணம் என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அதிமுகவினர்.

அதிமுக பிளவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதால், "கட்சியில் மாற்றம் தேவை" என்ற குரல்கள் ஏற்கனவே எழுந்து கொண்டிருந்தன. குறிப்பாக, நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் அடுத்து எதுவும் நடக்காத நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட தொடங்கியது அதிமுக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தவெக அரசு

இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி இந்த அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதுவே அதிமுகவில் பிளவு வெளிப்படையாக தெரியும் அளவுக்கு சூழ்நிலையை மாற்றியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஈபிஎஸ் தரப்பு மனு கொடுத்தது.

அமைச்சரவையில் இடம்

இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பும் மனு அளித்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்தது. இந்த நிலையில், தவெக அரசை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிருப்தி அணியினரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.

விஜய்

இதற்காக பல்வேறு பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக தகவல்கள் வெளியானது. அதிலும் குறிப்பாக, சி.வி.சண்முகம் வீட்டிற்கு நேரடியாக சென்று முதல்வர் விஜய் சில எம்.எல்.ஏக்களை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. இதனால் "அதிமுகவில் பெரிய பிளவு வரப் போகிறது" என்ற தகவல்கள் வேகமாக பரவின. ஆனால் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றபோது அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி

இதனால் அதிருப்தி அணியினர் கடும் ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பலரும் பின்னர் அமைதியாக எடப்பாடி பழனிசாமி தரப்புடன் மீண்டும் இணையும் முயற்சியில் இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, ஆரம்பத்தில் இருந்த ஆதரவு தற்போது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. முன்பு 25 எம்.எல்.ஏக்கள் இருந்த அணியில் தற்போது 17 பேர் மட்டுமே உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிருப்தி அணி

இதற்கிடையில், அதிருப்தி அணியில் இருந்த சில மாவட்ட செயலாளர்களின் பதவிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார். அந்த பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஈபிஎஸ் தரப்பு கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "கட்சியில் சேர விரும்பினால் அமைதியாக சேரலாம். ஆனால் பறிக்கப்பட்ட பதவிகளை திரும்ப வழங்க முடியாது" என்று தெளிவாக சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சி.வி.சண்முகம்

இதனால் அதிருப்தி அணியில் மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சி.வி.சண்முகம் மட்டும் இன்னும் பின்வாங்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவை கூட்டி, எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் எப்படி ஓரங்கட்டப்பட்டாரோ, அதேபோல் ஈபிஎஸையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும் என்ற கணக்கில் அவரது தரப்பு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

லீமா ரோஸ்

மறுபுறம், பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமியும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த சில வாரங்களில் அதிமுகவில் மேலும் பரபரப்பான அரசியல் திருப்பங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் லால்குடி எம்எல்ஏவான லீமா ரோஸ் தான் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.

அதிமுக

தவெக ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி வழங்கப்படும் என அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பணத்தாசை காட்டியதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் அதிமுகவினர், தற்போது அதிருப்தி எம்எல்ஏக்களை விஜய் கண்டுகொள்ளாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் பதவி தர மறுத்து விட்டார். இதனால் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+