“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்!
சென்னை: "குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெகவை ஆதரிக்க கூட்டணி கட்சியினரை வழியனுப்பி வைத்தேன். நம்முடைய தயவில் தான் தவெக ஆட்சி நடக்கிறது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார்.

அதிமுக சார்பில் இரண்டு முறை தேர்தலில் நின்ற அதிமுகவின் முக்கிய முகமான கஜா என்கிற கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஜேந்திரனுடன் காஞ்சிபுரம் வடக்கு மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அதிமுகவினர் ஏராளமானோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து மக்கள் வெளியேறுகிறார்கள் என்றால் ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்தோ, அல்லது ஆளுங்கட்சியை நோக்கியோதான் போவார்கள். அதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு திமுக ஆளுங்கட்சி அல்ல, எதிர்க்கட்சியாக இருக்கிறது.
எதிர்க்கட்சியை நோக்கி நீங்கள் இவ்வளவு பேர் வருகிறீர்கள் என்றால், பதவிக்காகவோ சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவோ வரவில்லை. இழந்திருக்கக்கூடிய ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு, பணியாற்ற வந்திருக்கிறீர்கள்.
1967ம் ஆண்டு திமுக அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு கருணாநிதி தலைமையேற்றோம். 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்ஸி நிலை அமல்படுத்தப்பட்டது. கலைஞர் நெருக்கடி நிலையை எதிர்த்து எனக்கு ஆட்சி முக்கியமில்லை, ஜனநாயகம் தான் முக்கியம் என சொல்லி சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி தீர்மானம் போட்டார். தீர்மானம் போட்ட காரணத்தால் 1976ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டது.
அதன்பின் 13 ஆண்டுகாலம் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. பின்னர் 1996, 2006, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. 2001, 2011, 2026 தேர்தல்களில் நாம் தோற்றோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெற்றி, தோல்வி என்பது திமுகவுக்கு மாறி மாறி வரும். வெற்றியைக் கண்டு நாம் வெறிக்கொண்டு அலைந்தவர்கள் இல்லை. தோல்வியைக் கண்டு துவண்டு போனவர்களும் இல்லை.
இன்றைக்கு வெற்றி வாய்ப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் நாம் இழந்தாலும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த தவெக ஆட்சியே நம்முடைய தயவில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
நாம் வெற்றி பெற வேண்டும், திமுக ஆட்சியமைக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் தோற்க வேண்டும் என்று தான் நாம் தேர்தல் களத்தை சந்தித்தோம். நம் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆக, தவெகவுக்கு ஆதரவு கொடுக்க செல்லும்போது என்னிடம் சொல்லி விட்டு தான் சென்றார்கள். நான் அவர்களிடம் அது உங்கள் விருப்பம். உங்கள் ஜனநாயகம் என சொன்னேன்.
இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது. அதன்மூலமாக பாஜக உள்ளே வந்து விடும் என்பதால் நான் மறுப்பேதும் சொல்லாமல் வழியனுப்பி வைத்தேன். எனவே நம்முடைய தயவில் அமைந்திருக்கும் இந்த தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவிலேயே நாம் பணியாற்ற இந்த நேரத்திலேயே உறுதியெடுத்துக் கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கஜேந்திரனின் கடந்தகால உழைப்பைப் பாராட்டிய ஸ்டாலின், "எந்தக் கட்சியில் இருந்தாலும் விசுவாசமாக இருக்க வேண்டும். அதிமுகவில் விசுவாசமாக இருந்த கஜேந்திரன், இனி திமுகவிலும் விசுவாசமாகப் பணியாற்றுவார் என நம்புகிறேன்" என்றார்.
-
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
தவெகவில் இணைந்த 4 மாஜி அமைச்சர்கள், 6 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு











Click it and Unblock the Notifications