பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யபட்ட சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று
மும்பை: எல்கர் பரிஷத் - பீமா கோரேகான் வன்முறை வழக்கில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழக சமூக செயற்பாட்டாளரான 84 வயது பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கும் மராத்தியர்களுக்கும் இடையிலான போரின் 200வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ல் நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையில் தலித்துகள், சமூக செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது மிகப் பெரும் வன்முறை வெடித்தது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக சனிவர் வாடாவில் எல்கர் பரிஷத் நிகழ்வு நடைபெற்றது. இதில்தான் பீமா கோரேகான் வன்முறைக்கு தூண்டிவிடப்பட்டது என்பது வழக்கு. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ. ஏராளமான சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைத்தது. ஜார்கண்ட்டில் ஆதிகுடிகளின் உரிமைக்காக பாடுபட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி என்ற 84 வயது பாதிரியாரையும் கைது செய்தது என்.ஐ,ஏ.
ஸ்டேன் ஸ்வாமிக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்பது என்.ஐ.ஏ. குற்றச்சாட்டு. மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டேன் ஸ்வாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உரிய சிகிச்சை வழங்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் ஸ்டேன் ஸ்வாமிக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.
இதனடிப்படையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்டேன் ஸ்வாமி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஸ்டேன் ஸ்வாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தலோஜா சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications