"டமார்".. குண்டை தூக்கி போட்ட ஆய்வு.. தென்றல் வந்து தீண்டும்போது.. இப்படியும் தொற்று பரவுமாம்..!
தென்றல் காற்று மூலம் கொரோனாவைரஸ் பரவும் என்கிறார்கள்
மும்பை: ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து இருமுகிறபோது, அதே திசையில் மெல்லிய காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என்று புது ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலகை மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் எத்தகைய தன்மை வாய்ந்தது, வீரியமிக்கது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்...
ஆனால், அதற்குள் இந்த வைரஸானது பல்வேறு வடிவங்களை பெற்று பரவிவருகிறது... எனினும் மருத்துவர்களின் ஆய்வுகள் தினம் தினம் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

மாஸ்க்
கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்தே, மக்கள் அனைவரும் மாஸ்க் போட வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.. இதைதான் உலக மக்களும் கடைப்பிடித்து வருகிறார்கள்... அப்படி கடைப்பிடிக்காதவர்களை தீவிரமாக கண்காணித்து அபராதம் விதிப்பது அனைத்து நாடுகளிலுமே நடைமுறையில் உள்ளது.

காற்றோட்டம்
2 நபர்களுக்கு நடுவில் 2 மீட்டர் இடைவெளி அதாவது ஆறரை அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதியைதான் முதலில் சொன்னார்கள்.. ஆனால், இந்த இடைவெளி அளவு போதாது என்றார்கள்.. அதன்படி, காற்றோட்டத்தின் அளவு மற்றும் வீதம், வெவ்வேறு காற்றோட்ட உத்திகளுடன் தொடர்புடைய உட்புற காற்று ஓட்ட முறை, திரவத்துளி உமிழ்வு முறை போன்ற 3 காரணிகளை வைத்து ஆய்வு ஒன்று சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

தனிநபர் இடைவெளி
அந்த ஆய்வின் முடிவில், மூடப்பட்ட ரூம்களில் காற்றில் மிதந்து வரும் வைரசில் இருந்து பாதுகாக்க, 2 நபர்களுக்கு இடையிலான 2 மீட்டர் இடைவெளி போதுமானதாக இருக்காது என்றும், ஒருவரிடம் இருந்து வெளியேற்றப்பட்ட வைரஸ்களில் உள்ள திரவத்துளிகள், மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க, தனிமனித இடைவெளி மட்டுமே போதாது, மூக்கு மற்றும் வாயை முறையாக மறைக்க வேண்டும், போதுமான காற்றோட்டம் போன்ற பிற கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

வல்லுநர்கள்
சுருக்கமாக சொன்னால், 6 அடியை தாண்டியும் வைரஸ் பரவுமாம்.. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க 6 அடி ஒரு தொடக்கமாக அமைந்தாலும், மோசமான காற்றோட்டம் உள்ள பகுதிகளில் இடைவெளி கட்டாயம் அவசியம் என்பதே அந்த ஆய்வின் முடிவாக இருந்தது.. காற்று சுழற்சி, காற்றோட்டம், கூட்டத்தின் அடர்த்தி, மக்கள் முகமூடி அணிந்திருக்கிறார்களா, அவர்கள் அமைதியாக இருக்கிறார்களா, பேசுவது, கூச்சலிடுவது அல்லது பாடுவது போன்ற பல காரணிகளைக் கருத்தில்கொண்டே, இந்த 6 அடி போதுமானதா இல்லையா என்ற மதிப்பீடுகள் நடந்தன.

தென்றல் காற்று
இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. முழங்கையில் இருமினாலும், அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமினாலும், கொரோனா பரவுகிற வாய்ப்பை குறைக்கும் என்கிறார்கள். மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தி உள்ளனர்... அதில் வீட்டை விட்டு வெளியே வந்து ஒருவர் இருமுகிறபோது, அதே திசையில் மெல்லிய காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என்று கண்டறிந்துள்ளனர்.

இருமல்
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் அமித் அகர்வால் சொல்லும்போது, "வீட்டுக்கு வெளியே வந்து விட்டாலே மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.. அதிலும், சில்லென்று காற்று அதாவது தென்றல் போல காற்று தவழ்ந்து வரும் சூழலில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.. முழங்கையில் இருமுவது, முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவது போன்றவைகளை கடைப்பிடித்தால், கொரோனாவைரஸ் வெளியே பரவுவதை குறைக்கும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications