மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகாராஷ்டிரா: பட்னாவிஸ் நவ. 30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் கோஷ்யாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நவம்பர் 30-க்குள் முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் புதிய திருப்பமாக பாஜகவும் என்சிபி (அஜித் பவார்) பிரிவும் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளன. முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவார் பதவியேற்றுள்ளனர்.

    Fadnavis to prove majority by 30 November in Maharashtra Assembly

    இந்திய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன இந்த நிகழ்வுகள். நள்ளிரவு வரை சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி தான் ஆட்சி அமைக்கும் என்கிற சூழ்நிலை விடிவதற்குள் அடியோடு மாறிப் போனது.

    அதிகாலை 5.45 மணிக்கே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கை வெளியிடப்பட்டது. இப்புதிய அரசியல் திருப்பங்கள் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

    மகாராஷ்டிரா: சட்டசபை தேர்தல் முடிவுகள் முதல்.. புதிய ஆட்சி அமைந்தது வரை நடந்த தகிடுதத்தங்கள்! மகாராஷ்டிரா: சட்டசபை தேர்தல் முடிவுகள் முதல்.. புதிய ஆட்சி அமைந்தது வரை நடந்த தகிடுதத்தங்கள்!

    இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நவம்பர் 30-க்குள் பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள் விவரம்: (மொத்தம் 288 தொகுதிகள்)

    பாஜக-105

    சிவசேனா- 56

    என்சிபி- 54

    காங்கிரஸ்- 44

    மஜ்லிஸ் கட்சி- 2

    பகுஜன் விகாஸ் ஆஹாதி- 3

    மார்க்சிஸ்ட் கட்சி- 1

    ஜன் சூர்ய சக்தி-1

    கிரந்திகரி சேத்கரி கட்சி-1

    மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா-1

    விவசாயிகள் கட்சி-1

    ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷா-1

    சமாஜ்வாதி கட்சி-2

    ஸ்வபிமானி பக்‌ஷா-1

    சுயேட்சைகள்-13

    English summary
    Maharashtra Chief Mimister Devendra Fadnavis will prove his majority on Nov. 30 in assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X