சட்டசபையில் பட்னாவிஸால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது- என்சிபி மூத்த தலைவர் நவாப் மாலிக்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் என்சிபி கட்சியின் அஜித் பவார் பிரிவின் ஆதரவுடன் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அஜித் பவார், துணை முதல்வராகி உள்ளார்.

சிவசேனா- காங்கிரஸ்- என்சிபி மூன்று கட்சிகளும் ஆட்சி அமைக்க தயாராக இருந்த நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்றது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் நவாப் மாலிக், தேவேந்திர பட்னாவிஸால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அஜித் பவார் தவறு செய்துவிட்டார். அவர் தனது தவறை விரைவில் உணருவார்.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பட்னாவிஸ், தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications