"கசமுசா".. காருக்குள்ளேயே அழகியுடன் கணவர்.. கிட்ட சென்று உற்று பார்த்த மனைவி.. அவர் பிரபல நடிகையாமே

மனைவி மீது கார் ஏற்றி தப்பித்துச் சென்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு அழகியுடன், காருக்குள் கசமுசாவில் இருந்துள்ளார் கணவர்.. பக்கத்திலேயே சென்று அந்த காருக்குள் எட்டிப்பார்த்தார் மனைவி.. அதற்கு பிறகு என்ன நடந்திருக்கும்?
இந்த கள்ளக்காதல் விவகாரம் ஒரு எல்லையே இல்லாமல் ஊரு விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம்.. என கடந்து போய் கொண்டேயிருக்கிறது..

அதேபோல, பெண்களை பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள் இருந்தும், பெண்களுக்கு ஏராளமான பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டேயிருக்கின்றன..

 விஷம் + நஞ்சு

விஷம் + நஞ்சு

பாதிக்கப்பட்ட பெண்களுக்கே தெரியாமலே ஏகப்பட்ட அக்கிரமங்கள் நடந்து வருகிறது என்றால், சில இடங்களில் அந்த பெண்களுக்கு தெரிந்தும், உடந்தையாக இருந்து அநியாயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதில் பிரதான இடத்தில் இருப்பது கள்ளக்காதலால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள்தான்.. பெற்ற பச்சிளம் குழந்தைகளை கொல்வதும், கணவருக்கே சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்வதும் என, பெண்களே இத்தகைய கொடூரங்களில் இறங்கி வருகின்றனர்.. சில இடங்களில், மனைவியின் கள்ளக்காதலை ஜீரணிக்க முடியாமல், உச்சக்கட்ட ஆத்திரத்துக்கும் கணவன்கள் சென்றுவிடுகிறார்கள்.

 பிரபல நடிகை

பிரபல நடிகை

மும்பையில் ஒரு பயங்கரம் நடந்துள்ளது... அந்தேரி மேற்கு நியூ லிங்க் சாலையில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது.. மிகப்பெரிய பணக்காரர்கள் குடியிருக்கும் அப்பார்ட்மென்ட்டாம் இது.. இங்குள்ள ஒரு வீட்டில், இந்திப்பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது.. இவரது மனைவி பெயர் யாஸ்மின்.. இவர் ஒரு போஜ்புரி நடிகை.. தம்பதி இருவரும் ஒன்றாகவே அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்துள்ளனர்.. இந்நிலையில், கடந்த 19ம் தேதி, அப்பார்ட்மென்ட்டில் உள்ள கார் பார்க்கிங்கில், கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்துள்ளார்...

 பார்க்கிங்கில் சந்திரமுகி

பார்க்கிங்கில் சந்திரமுகி

அவருடன் மாடல் அழகி ஒருவரும் காருக்குள் இருந்திருக்கிறார்... இந்த அழகி, அந்த புரொடியூசருக்கு கள்ளக்காதலியாம்.. இதனிடையே, காரை பார்க் செய்துவிட்டு வரப்போன கணவரை காணோமே என்று, யாஸ்மின் ஸ்டிரைட்டாகவே கார் பார்க்கிங்கிற்கு வந்துவிட்டார்.. காருக்கு அருகில் சென்று பார்த்தால், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் கசமுசாவில் இருந்ததை பார்த்து அதிர்ந்து போய்விட்டாராம்.. இதனால் அங்கேயே "கோவை சரளாவாக" மாறி, சந்திரமுகியாக காட்சி தந்தார் யாஸ்மின்.. ஆத்திரம் தீரும்வரை அசிங்க அசிங்கமாக கணவரை திட்டி தீர்த்தார்.. அந்தபெண்ணையும் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி கார் பார்க்கிங்கிலேயே சாமியாடினார்..

 அழகி நடிகை

அழகி நடிகை

யாஸ்மின் உடம்பின் மீது கார் ஏறியதில் அவரது கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. இதையடுத்து அங்கிருந்தோர் விரைந்து சென்று, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்... யாஸ்மினுக்கு ட்ரீட்மென்ட் போய்க் கொண்டிருக்கிறது.. ஆனால், யாருக்கும் இந்த கள்ளக்காதல் தெரிந்துவிடக்கூடாது என்று நினைத்து, புரொடியூசர் தப்பித்து சென்றாலும், நடந்த சம்பவம் மொத்தமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது.. இதை அடிப்படை ஆதாரமாக வைத்து, போலீசாரும் கேஸ் பதிவு செய்துள்ளனர்.. தப்பியோடிய தயாரிப்பாளரை கைது செய்ய தேடி வருகின்றனர்.. அந்த அழகி என்ன ஆனார் என்று தெரியவில்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+