இடுப்பில் கயிறு கட்டி.. மனசே ஆறல.. 300 அடி பள்ளத்தில் திணறிய ஆபீசர்ஸ்.. பிரபலத்தை விழுங்கிய "கும்பே"
மும்பை: மும்பையை சேர்ந்த பிரபலம் திடீரென உயிரிழந்துள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.
மகாராஷ்டிராவின் ரய்காட் மாவட்டத்தில் உள்ளது கும்பே அருவி.. இது இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற அருவியாகும்... சமீபத்தில் விஜய் நடித்திருந்த வாரிசு படத்தில், நடிகர் விஜய் இந்த அருவிக்கு செல்வது போலதான் ஒரு பாடலில் சீன் எடுத்திருப்பார்கள்.

வீடியோக்கள்: அந்த அளவுக்கு பிரபலமான இந்த கும்பே அருவிக்கு, இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் சென்றுள்ளார்.. அன்வி-க்கு 27 வயதாகிறது.. மும்பையை சேர்ந்த, @theglocaljournal என்ற ஐடியின் மூலம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பயணம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.. இவருக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.
தன்னுடைய நண்பர்களுடன், இந்த அருவிக்கு ஆன்வி சென்றுள்ளார்.. அருவியை பார்த்துமே, தன்னுடைய செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றார்.. இதற்காக அங்கிருந்த பாறையின் ஓரத்தில் நின்றுகொண்டு, வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.. அப்போது, கால்தவறி 300 அடி பள்ளத்தாக்கில் கீழே விழுந்துவிட்டார் அன்வி.
அதிகாரிகள்: இதைப்பார்த்து அலறிய அவரது நண்பர்கள் உடனடியாக, பக்கத்திலிருந்த அதிகாரிகளுக்கு தகவல் தந்தார்கள்.. அதிகாரிகளும் விரைந்து வந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் கடலோர காவல்படை, மின்வாரிய ஊழியர்களும் ஆன்வி விழுந்த பகுதியில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இறுதியில், 6 மணி நேரம் போராடி, ஆன்வியை மேலே கொண்டு வந்தார்கள்.
ஆன்வியின் உடம்பெல்லாம் காயங்கள் அதிகமாக இருந்தன.. இதையடுத்து, அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அவரை தூக்கி சென்றனர்... ஆன்விக்கு டாக்டர்கள் தீவிரமான சிகிச்சையை தந்தும்கூட, ஆன்வியை காப்பாற்ற முடியவில்லை. ஆன்வி கம்தார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த மழை: இதுகுறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "எங்களுக்கு தகவல் கிடைத்ததுமே விரைந்து சென்றோம்.. அப்போதுதான், அந்த பெண் 300-350 அடிக்கு கீழே விழுந்திருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்..
பிறகு அவர் விழுந்த இடத்துக்கு நாங்கள் சென்றபிறகும்கூட, மழை அதிகமாக பெய்து கொண்டே இருந்தது.. பலத்த மழை பெய்ததால், அவரை மேலே கொண்டு வருவது எங்களுக்கு சிரமமாக இருந்தது. அதனால் கயிறை கட்டி அவரை மேலே தூக்க முடிவு செய்தோம்... அப்போதும்கூட, பாறையிலிருந்து கற்கள் தொடர்ந்து எங்கள் மீது விழுந்து கொண்டே இருந்தது.. இது மீட்புப் பணியை மேலும் கடினமாக்கி விட்டது என்றார்.
வித்தியாசமான ரீல்ஸ்: எப்போதுமே வித்தியாசமான இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அதை வீடியோவாக பதிவிடுவது அன்வியின் வழக்கமாக இருந்திருக்கிறது.. இவரது ஒவ்வொரு வீடியோவும் பிரபலமாகிவிடுவதால் இவருக்கு இன்ஸ்டாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.. இப்போது ஆன்வியின் மரணம், அவரது ரசிகர்களை உலுக்கி எடுத்து வருகிறது.
பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அன்வியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இப்படித்தான், சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் பலியை சேர்ந்த புதுமண தம்பதியினர், கோர்மகட் ரயில் பாலத்தின் மீது நின்று கொண்டு போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருந்தார்கள்..
பலத்த காயம்: அப்போது எதிர்பாராத விதமாக ரயில் அந்த பாதையில் வந்துள்ளது.. திடீரென ரயிலை பார்த்ததுமே என்னசெய்வதென்று தெரியாமல் பதறிப்போன தம்பதி, 90 அடி ரயில் பாலத்தின் மீதிருந்தே கீழே குதித்துவிட்டார்கள்.. இதில் இருவருமே பலத்த காயமடைந்தனர்.. இப்போது இருவருமே மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications