Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை ஆசையாக ராதிகாவை கட்டிப்பிடிக்க போன ஆனந்த்.. அட, அம்பானி வீட்டு கல்யாணத்தில் "விஐபி" யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று வெகுஅமர்க்களமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அம்பானி - நீடாவின் மகன் ஆனந்த், ராதிகா மெர்ச்சண்ட் என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார்.. மும்பையில் உள்ள ஜியோ அரங்கில் இந்த திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.. இந்த கல்யாணத்தில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று சிறப்பிக்க போகிறார்கள்.

Ambani Anant Ambani radhika merchant

சாமி தரிசனம்: இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஜரூராக நடந்து வந்தன.. தன்னுடைய மகன் திருமணத்தை முன்னிட்டு நீடா அம்பானி, காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண அழைப்பிதழை விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபடுவதற்காகவும், திருமணத்திற்கு கடவுளை அழைக்க நாடி வந்துள்ளதாகவும் நீடா அம்பானி பூரித்து கூறியிருந்தார். திருமணத்திற்கு வருகை தரும் விஐபிகளுக்கு தங்க சாமி சிலைகள் இடம்பெற்ற கோயில் வடிவிலான அழைப்பிதழ் தயாரித்து அதனைத் தானே பிரத்தியேகமாகச் சென்று அம்பானி கொடுத்திருந்தார்..

சடங்குகள்: இதையடுத்து, இந்த மாத துவக்கத்திலிருந்தே தினந்தோறும், ஒவ்வொரு நாளும் அம்பானி வீட்டில் சடங்குகளும், பூஜைகளும் வெகுஅமர்க்களமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த சடங்குகளுக்கு, விஐபிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.. எனவே, இவர்கள் தினந்தோறும் இரவில் நடக்கும் சடங்குகளில் பங்கேற்று வந்தனர்.

இன்று திருமணம் என்பதால், நேற்றிரவும் சிவ் சக்தி பூஜை நடத்தப்பட்டது.. இந்த சிவ்சக்தி பூஜைக்கு நடிகை ஸ்ரீதேவி மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், அவரது காதலர் சிகர், மிஸ் வேல்டு மனுஷி சில்லர், மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி, நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

பூஜைகள்: இந்த பூஜையில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் அணிந்து வந்த உடைகளும், நகைகளும் காண்போரை சுண்டியிழுத்தது. அமைதியான, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக பிரார்த்திக்க கிரஹ சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. எனவே, ஆனந்த் - ராதிகா இருவரும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டதையடுத்து, மணமக்கள் இருவருமே இதில் கலந்து கொண்டனர்.

அப்போது, மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவழைக்கப்பட்டனர். நீடா அம்பானி, வரப்போகும் மருமகள் ராதிகாவை மனமார ஆசீர்வாதம் செய்தார்.. பூஜைகள் ஒவ்வொன்றாக நடந்து முடிந்ததுமே, ஆனந்திற்கு மணமகள் ராதிகா மாலை அணிவிக்கிறார். அப்போது ராதிகாவை அன்புடன் அரவணைத்து கொள்கிறார் ஆனந்த். இந்த காட்சியினை முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் மகிழ்ச்சியுடன் பார்த்து பூரிக்கிறார்கள்.

வீடியோ: இந்த சிவ்சக்தி பூஜையில் மெஹந்தி வைக்கும் நிகழ்வும் நடந்தது. இந்த மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியில், மணமகளின் வளர்ப்பு நாயும் கலந்து கொண்டது. நாய்க்கு குஜராத் முறையில் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெஹ்ந்தி நிகழ்வு நடக்குமிடத்தில், இந்த நாயை கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள்.. விழாவுக்கு வந்தவர்கள் அனைவருமே, அலங்கரிக்கப்பட்ட செல்ல நாயை வியப்புடன் பார்த்து சென்றார்கள். இந்த பூஜையின் நிகழ்வுகள்தான் வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக திருமணத்திற்கு 320 மில்லியன் டாலர் அளவுக்கு அம்பானி செலவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இன்று திருமணம் முடிந்து, நாளை 13ம், 14ம் தேதிகளில் திருமணத்திற்கு பிந்தைய சடங்குகளும் நடக்க போகிறதாம்.

மொத்த செலவு: இந்த திருமண விழாவை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதம் குஜராத்தின் ஜாம்நகரில் முதல் ப்ரீ வெட்டிங் விழாக்கள் நடைபெற்றது. இதை தொடர்ந்து 2-வது ப்ரீ வெட்டிங் விழா ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரம்மாண்டமாக நடந்தது.

இதனிடையே, அம்பானி வீட்டு திருமண செலவுகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, திருமண கொண்டாட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 4,000-5,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாம்.. ஆனால் இது அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+