Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை.. பல ரயில்கள், விமானங்கள் ரத்து

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    MUMBAI RAIN | மும்பை மழை.. சாலைகளில் வெள்ளம்..விமானங்கள் ரத்து.. போக்குவரத்து பாதிப்பு- வீடியோ

    மும்பை: மும்பையில் பெய்து வரும் கன மழையால், பல விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை, தானே மற்றும் நவி மும்பையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 26 காலை 8.30 மணி முதல் ஜூலை 27 காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, சான்டாக்ரூஸ் பகுதியில், 219 மிமீ மழை பெய்துள்ளது. கொலாபா பகுதியில் 90 மி.மீ மழை பெய்துள்ளது.

    Flights and trains canceled due to heavy rains in Mumbai

    விமானநிலைய ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், இன்று 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அதே நேரத்தில் 9 விமானங்கள் மும்பை சர்வதேச விமான நிலையத்திலிருந்து அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதேபோல வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸில் சுமார் 700 பயணிகள் பரிதவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க மகாராஷ்டிரா அரசு என்.டி.ஆர்.எஃப் உதவியை நாடியுள்ளது.

    நான்கு நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    1) 22105/22106 மும்பை-புனே-மும்பை இந்திராயணி எக்ஸ்பிரஸ் (பயணம் தொடங்கும் தேதி) 27.7.2019

    2) 12298 புனே-அகமதாபாத் டுரான்டோ எக்ஸ்பிரஸ் - 27.7.2019

    3) 11097 புனே-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் - 27.7.2019

    4) 11098 எர்ணாகுளம்-புனே எக்ஸ்பிரஸ் - 29.7.2019

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+