அலற விட்ட அம்பானி வீட்டுக் கல்யாணம்! அட்டெண்டன்ஸ் போட்ட ஓபிஎஸ்! கிஃப்டை பார்த்ததும் நெகிழ்ந்த முகேஷ்
மும்பை: இந்தியாவையே பேச வைத்திருக்கும் அம்பானி வீட்டு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பாலிவுட் பிரபலங்கள் வரை மணமக்களை வாழ்த்தினார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுடன் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அவர் அளித்த கிஃப்டை பார்த்து அம்பானியே ஒரு நொடி நெகிழ்ந்து போனார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபரின் மகளான ராதிகா மெர்சண்டுடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜாம்நகரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பேசுபொருளானது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், சல்மான்கான் தொடங்கி உலக அளவில் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் திரண்டனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆயிரக்கணக்கான உணவு வகைகள் பரிமாறப்பட்டது. தொடர்ந்து ஆனந்த அம்பானி ராதிகா மெர்சென்டின் இரண்டாவது ப்ரீ-வெட்டிக் கொண்டாட்டங்கள் இத்தாலியில் கேன்சில் 29ஆம் தேதி முதல் 20 ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் இத்தாலியில் குவிந்தனர். அது மட்டுமல்லாமல் சல்மான்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், ஜான்விகபூர், கரீனா கபூர் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களுடன் மிகப்பெரிய சொகுசு கப்பலில் நான்கு நாள் கொண்டாட்டமாக இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முன்தினம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான பிகேசி கன்வென்ஷன் சென்டரில் ஆனந்த அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஜான் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களும், இந்தியாவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர்கள், அரசியல்வாதிகள், தமிழகத்திலிருந்து ரஜினிகாந்த், சூர்யா, நயன்தாரா, இயக்குனர் அட்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இதேபோல பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழா தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தொடர்ந்து திருமணத்திகு பிந்தையாக நிகழ்வுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதே நேரத்தில் தமிழகத்திலிருந்து முக்கியமான அரசியல் கட்சி தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அம்பானி வீட்டில் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அம்பானி விட்டு திருமணத்தில் தனது மகன் ஜெயப்பிரதீப்புடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சி மேடைக்குச் சென்ற இருவரும் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்டை வாழ்த்தியதோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் முகேஷ் அம்பானியின் தந்தையும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனமான திருபாய் அம்பானியின் புகைப்படத்தை பரிசாக வழங்கினார். இதனை பார்த்து ஒரு நொடி அம்பானி நெகிழ்ந்தார். தொடர்ந்து புன்னகை முகத்துடன் ஓ.பன்னீர் செல்வத்துடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர். தற்போது இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதில்,"மும்பையில் இன்று நடைபெற்ற பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான திரு. முகேஷ் திருபாய் அம்பானி அவர்களின் மகன் திரு. ஆனந்த் அம்பானி - ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, முகேஷ் அம்பானி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய போது..." என குறிப்பிட்டுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications