அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழா மாஸ்..அண்டிலியாவில் பிரபலங்கள் அட்டனன்ஸ்! யார் யார் தெரியுமா?
மும்பை : உலகமெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகாக் கொண்டாப்பட்டு வரும் நிலையில் மும்பையில் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புதுமணத் தம்பதிகளான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் பூஜை செய்ய சச்சின், சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
எல்லாக் கடவுள்களுக்கும் முழுமுதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஒரு சில தெய்வங்களின் பண்டிகைகளை நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படும் கடவுளாக விநாயகப் பெருமான் பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக ஒரே நாளில் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வேறு வேறு பகுதிகளில் வேறு வேறு பெயர்களில் கொண்டாடப்படும்.
ஆனால் விநாயகர் சதுர்த்தி ஒன்று மட்டுமே இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாக இருக்கிறது. ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக கூறப்படுகிறது. அந்த நாளே விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகின்றனர் உலகெங்கும் வசிக்கும் இந்து சமூக மக்கள்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை பிரதிஷ்டை செய்து மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாள் நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் வட மாநிலங்களில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும். குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பையில் விநாயகர் சதுர்த்து விழா மிக கொண்டாட்டத்தோடு ஒரு திருவிழா போல கொண்டாடப்படுகிறது.
10 நாட்களுக்கும் மேலாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். அந்த வகையில் மும்பையில் உலக அளவில் பெரும் தொழிலதிபர்களின் ஒருவராக கருதப்படும் அம்பானி வீட்டில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. வருடம் தோறும் தனது வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பல பிரபலங்களை வரவழைப்பது அம்பானியின் வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் மும்பை அண்டிலியா வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்திற்காக முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீடு பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து சமீபத்தில் மணமுடித்த புதுமண தம்பதிகளான ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டுடன் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீட்டா அம்பானியும் விநாயகருக்கு பூஜை செய்தனர் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி, சல்மான் கான், அனன்யா பாண்டே, கரன் ஜோகர், சாரா அலிகான், மாதுரி தீக்ஷித், கியாரா அத்வானி, அனில் கபூர், ஜாக்கி ஷெரஃப், கரீனா கபூர்- சாயீஃப் அலி கான், சுனில் ஷெட்டி, உள்ளிட்ட பலரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மெகா விருந்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.












Click it and Unblock the Notifications