‛‛கணவரின் தோழியை உறவினராக கருத முடியாது’’.. மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! Cruelty வழக்கும் ரத்து
மும்பை: கணவரின் தோழியை குடும்ப உறவினராக கருத முடியாது. இதனால் அவர் மீது cruelty என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் கூறியது. மேலும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவரும் இருவரும் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினர். இந்நிலையில் தான் கடந்த 2022ம் ஆண்டு பிரச்சனை வெடித்தது.

2022 டிசம்பர் மாதம் அந்த பெண் சுர்கானா போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகாரளித்தார். அதாவது கணவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 498 ஏ( Cruelty பெண்ணை கணவன் அல்லது அவரது உறவினர் கொடுமைப்படுத்துவது), 406 ( நம்பிக்கை துரோகம்), 323 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 504 (அமைதி குலைக்கும் வகையில் அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் கணவரின் தோழி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது தனது கணவருக்கும் அவரது தோழிக்கும் திருமணத்தை கடந்த உறவு உள்ளது. கணவருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் வருகிறது. இந்த மெசேஜ் என்பது அவரை திருமணம் செய்யும் விருப்பத்தில் அந்த பெண் அனுப்புகிறார் எனவும் கூறியிருந்தார். அந்த பெண் அளித்த புகாரில் கணவரின் தோழி மீதும் குடும்ப உறுப்பினர்கள் மேற்கூறிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பந்தப்பட்ட கணவரின் தோழி சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனுஜா பிரபுதேசாய் மற்றும் என்ஆர் போர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛‛வழக்கு தொடர்ந்த பெண் (தோழி) மீது திருமணத்தை மீறிய உறவு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எப்ஐஆரில் அதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக குறிப்பிட்ட நபரின் மனைவியை கொடுமைப்படுத்தியது தொடர்பான எந்த குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. மேலும் கணவரின் தோழியை உறவினர் என்ற அடிப்படையில் கருத முடியாது. இதனால் Cruelty என்ற அடிப்படையில் அந்த பெண் (தோழி) மீது பதிவ செய்யப்பட்ட வழக்கு என்பது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும்'' எனக்கூறினர். மேலும் அவர் மீதான வழக்கை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications