‛திவாலாகி விட்டோம்’.. இந்தியாவின் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு பெரிய அடி.. விமான சேவைகள் திடீர் ரத்து
மும்பை: கடும் நிதி பற்றாக்குறையால் சிக்கி தவிக்கும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மான நடவடிக்கைக்கான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. இதனால் நாளையும், நாளை மறுநாளும் அந்நிறுவனம் விமானங்களை இயக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு கோ ஃபர்ஸ்ட் எனும் விமானம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வாடியா குழுமத்துக்கு சொந்தமானதாகும்.

இந்த நிறுவனம் சார்பில் ஏராளமான விமானங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 59 விமானங்களை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில் தான் விமானத்துக்கு தேவையான பொருட்களை இந்த நிறுவனம் அமெரிக்காவின் பிராட் அன்ட் விட்னி நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து இன்ஜின்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தற்போது வரை 28 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் வரவில்லை. பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் கோ ஃபர்ஸ்ட் நிறுவனமும் நிதி நெருக்கடியை சந்திக்க தொடங்கியது. இந்நிலையில் தான் வாடியா குழுமம் சார்பில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் டெல்லியில் உள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் தீர்மானத்துக்கான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது.
இதுபற்றி கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கவுசிக் கோனா கூறுகையில், ‛‛திவால் தீர்மான நடவடிக்கைக்கான மனுத்தாக்கல் என்பது துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் விமான நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் இது செய்யப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் சார்பில் நாளையும், நாளை மறுநாளும் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே தான் கோ ஃபர்ஸ்ட் நிறுவன விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக தற்போது மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலை சந்தித்துள்ள கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அதுபற்றிய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விரைவில் டிஜிசிஏ எனும் சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்க உள்ளது. மேலும் தற்போதைய சூழலில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய நிதி நெருக்கடி சூழல் என்பது அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications