இது வேறயா.. 2வது டோஸ் போடாமலேயே பறந்து வந்த "மெசேஜ்".. இளைஞரின் பரபர குற்றச்சாட்டு.. என்ன நடந்தது
2வது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒரு இளைஞருக்கு தவறுதலாக மெசேஜ் வந்துள்ளது
மும்பை: 2வது டோஸ் போடுவதற்கு முன்பே, தடுப்பூசிகள் அனைத்தும் முழுமையாக செலுத்தி கொண்டதற்கான மெசேஜ் வந்ததாக இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதியில் இருந்துதான், தடுப்பூசி போடும் பணி ஆரம்பமானது.. இந்த டிசம்பருக்குள் 100 கோடி தடுப்பூசியை செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன், தடுப்பூசி போரை துவங்கியது மத்திய அரசு.
ஆனால், ஆரம்பத்தில் நம் மக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.. இதற்கு பிறகுதான் மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது.. மாநில அரசுகளும் ஏராளமான சலுகைகளை அதிரடிகளை வெளிப்படுத்தி, தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தி வந்தன.

சுகாதாரத்துறை
இதற்கு நடுவில் 2வது அலை பரவல் வந்துவிடவும், அது ஏராளமானோர் உயிரை காவு வாங்கிவிட்டது.. இதனால் பயந்து போன பெரும்பாலான மக்கள், தாங்களாகவே தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டினர்.. அந்த வகையில், எத்தனை பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற விவரங்களை மத்திய சுகாதாரத்துறையும் அவ்வப்போது அறிக்கைகளாக வெளியிட்டு கொண்டே இருந்தது. இன்று 100 கோடி தடுப்பூசி இலக்கை மத்திய அரசு எட்டிப்பிடித்து விட்டது. பிரதமர் மோடிக்கு இன்றைய தினம் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மகாராஷ்டிரா
இப்படிப்பட்ட சூழலில் மகாராஷ்டிரா இளைஞர் ஒருவர் பகீர் புகார் ஒன்றை கிளப்பி உள்ளார்.. அவர் பெயர் விஜயகுமார் காகடே.. 29 வதயாகிறது.. மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தின் அவுசா தெஹ்சிலில் உள்ள ஜவல்கா கிராமத்தில் வசிப்பவர்.. இவர் இன்னும் 2வது டோஸ் போடவே இல்லை.. ஆனால், அவருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக சான்றிதழ் கிடைத்துள்ளதாம்.

சான்றிதழ்
இதை பற்றி விஜயகுமார் சொல்லும்போது, "என் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. அதில், "உங்களுக்கு மாலை 4.17 மணியளவில் கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் வெற்றிகரமாக தடுப்பூசி போடப்பட்டுவிட்டது... இனி உங்கள் தடுப்பூசி சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்" என்று இருந்தது.. அதை பார்த்து அதிர்ந்து போன நான், அந்த லிங்கை திறந்து பார்த்தேன்.. அப்போதுதான், நான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.. ஆனால் எனக்கு 2வது டோஸ் செலுத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த இடத்தில் அப்படி எந்த முகாமும் நடத்தப்படவில்லை" என்றார்.

செல்போன்
இது தொடர்பாக அதிகாரிகள் சொல்லும்போது, ஆபரேட்டர் செல்போன் நம்பரை தவறுதலாக டைப் செய்திருக்கலாம்.. அதனால்தான் இப்படி ஒரு தவறு ஏற்பட்டிருக்கிறது" என்றார். இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த இளைஞரின் புகார் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications