அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம்! புரிஞ்சுதா? ஐபிஎல்லை சிதறவிட்ட மீம்ஸ்! அதிரும் மும்பை
மும்பை: மும்பை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டி தொடர்பாக பல்வேறு மீம்ஸ்கள் வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
2023 ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. பழைய மும்பை டீம் சிதைந்ததில் இருந்தே.. தற்போது இருக்கும் புதிய மும்பை டீம் பெரிதாக வெற்றிகளை பெறுவது இல்லை.

கடந்த சீசனில் சொதப்பிய மும்பை டீம் இந்த சீசனிலும் மோசமாக சொதப்பி வருகிறது. இதுவரை நடத்த 7 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது.
நேற்று குஜராத்திற்கு எதிராக நடந்த போட்டியிலும் மும்பை அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் குஜராத் அணி 207/6 ரன்கள் எடுத்தது. அதையடுத்து இறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 152/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது. நேற்று குஜராத் அணியில் ஓப்பனிங் இறங்கிய கில் 34 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று 56 ரன்கள் எடுத்தார்.
அதன்பின் ஹர்திக் பாண்டியா 13, விஜய் சங்கர் 19 ரன்களை அடிக்க, மில்லர் - அபினவ் மனோகர் ஜோடி போட்டு மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கை சிதைத்தனர்.

மில்லர் 46, அபினவ் 42 என்று அடித்து வெளுத்தனர். அபினவ் வெறும் 22 பந்தில் 3 சிக்ஸ், 3 பவுண்டரி என்று 42 ரன்கள் எடுத்தார்.
கடைசியில் ராகுல் திவாதியா 3 சிக்ஸ் அடிக்க 5 பந்தில் 20 ரன்களை எடுத்தார். இதனால் குஜராத் அணி 207-6 ரன்கள் எடுத்தது. இதுதான் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடித்து இறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 2, இஷான் கிஷன் 13, கேமரூன் கிரீன் 33, திலக் வர்மா 2, அர்ஜுன் டெண்டுல்கர் 13 என்று சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மும்பை அணி 152-9 ரன்கள் எடுத்து அவுட்டானது.
மும்பை அணியின் தோல்வி குறித்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். முக்கியமாக கேப்டன் ரோஹித் சர்மா அடிக்கடி கோபம் அடைந்ததை கிண்டல் செய்து வருகின்றனர். அவரால் பவுலர்களை சரியாக கையாள முடியாததை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் அர்ஜுன் டெண்டுல்கர் அதிகம் ரன் கொடுக்கிறார். ஆனாலும் அவரை ரோஹித் சர்மாவால் கண்டிக்க முடியவில்லை. காரணம் அவர் சச்சின் மகன் என்பதை வைத்தும் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்த போட்டியில் குஜராத் அணியில் கில் - மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் ஆடி வருகின்றனர். இதில் கில் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கரின் அக்கா சாரா டெண்டுல்கர் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

இதை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்சில நாட்களுக்கு முன் சாரா தனது புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ''I Spy'' என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். அதேபோல் சுப்மான் கில்லும் தனது பக்கத்தில் செய்தார்.
சுப்மான் கில் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு மேல் இதே ''I Spy'' என்று கேப்ஷன் கொடுத்து இருந்தார். அதன்பின் இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் போஸ்ட்களை மாறி மாறி ஹார்ட் விட்டனர். இதெல்லாம் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
இதை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications