நானும் டைட்டானிக் கேப்டன் போலதான்.. அனைவருக்கும் பின் கடைசியாகவே எனக்கு தடுப்பூசி.. நீதிபதி உருக்கம்
மும்பை: டைட்டானிக் திரைப்படத்தில் வருவதைப் போல அனைவரையும் பாதுகாத்த பின்னரே, நீதிபதிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள் என மும்பை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது இரண்டாம்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டத்தில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைவரையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி
இந்த வழக்கு மும்பை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கைக் கண்டித்த உயர் நீதிமன்றம், துப்புரவுத் தொழிலாளர்கள், தனியார் ஊழியர்கள், டப்பாவாலாக்கள் ஆகியோரும் தான் முன் களப் பணியாளர்கள் என்றும் அவர்களுக்காக ஏன் பொதுநல வழக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

சுயநலமானது
இது நிர்வாகியின் வசதிக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் இந்தக் கொள்கையில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர். மேலும். அரசின் இதுபோன்ற கொள்கை முடிவுகளில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீதித்துறைக்கு மட்டும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது "சுயநலமானது" என்று விமர்சித்தனர்.

நானும் டைட்டானிக் கேப்டன்தான்
மேலும் "டைட்டானிக் திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா? அதில் வரும் கப்பலின் கேப்டன் உங்களுக்கு நினைவிருக்கிறதா? கப்பலில் உள்ள மற்றவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வரை அந்த கேப்டன் காத்திருப்பார். அதேபோல தான் நானும் இங்கு கேப்டன். முதலில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே நான் தடுப்பூசியை எடுத்துக்கொள்வேன்" என்று கூறினார்.

பொதுநல வழக்குகள்
இதேபோல நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பல பிரிவினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இது போல தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்ற விசாரணை நடத்த வேண்டும் என பாரத் பயோடெக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications