ஒரே செஷன்.. ஹெச்டிஎப்சி பங்குதாரர்களின் ரூ.49,355 கோடி காலி.. அல்லோகலமான மார்க்கெட் நிலவரம்
மும்பை: ஒரே செஷனில் இன்று ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குதாரர்களின் ரூ.49,355 கோடி காலியான ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளில் ஹெச்டிஎப்சி ஒன்றாகும். ஆனால் இது தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் பங்குகளில் முதலீடு செய்வது என்பது பங்குதாரர்களுக்கு லாபமானதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் இன்று ஹெச்டிஎப்சி வங்கிகளின் பங்குதாரர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. அதாவத இன்றைய பங்கு சந்தையின் இந்த வங்கியின் பங்குகள் இன்று 4 சதவீதம் சரிந்து ரூ.1,563.90 என முடிவடைந்தது.
முன்னதாக இன்று ஒரே செஷனில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்குதாரர்களின் ரூ.49,355 கோடி கோடியை இழந்தனர். அதாவது ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதனம் என்பது முந்தைய வர்த்தக அமர்வில் ரூ.12,34,103.99 கோடியாக இருந்தது. இது அடுத்த வர்த்தக அமர்வில் ரூ.11,84,748.93 கோடியாகக் குறைந்ததே பங்குதாரர்கள் ரூ.49,355 கோடியை இழந்ததற்கு முக்கிய காரணமாகும்.
இது கடந்த 4 மாதங்களில் ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் சந்தித்த அதிகபட்ச இழப்பாகும். இதற்கு முன்பு கடந்த மே மாதம் 5ம் தேதி இந்த வங்கியின் பங்குதாரர்கள் இதேபோல் மோசமான நிலையை சந்தித்தனர். அதன்பிறகு இயல்பான நிலை தொடர்ந்த நிலையில் தற்போது ஹெச்டிஎப்சி பங்குதாரர்கள் ஒரே செஷனில் ரூ.49,355 கோடியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஹெச்டிஎப்சி வங்கியுடனான சமீபத்திய இணைப்புகள் நிதி விவகாரத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.உயர் பணப்புழக்கம் (Higher Liquidity) மற்றும் ஐசிஆர்ஆர் ஆகியவற்றால் என்ஐஎம் மீதான தாக்கம் என்பது எதிர்பார்ததை விட அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூட்டத்தில் கூறப்பட்டது. இது பங்குகள் மீதான முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருந்ததும் கவனிக்கத்தக்கதாகும்.
மேலும் வங்கியின் வாராகடன் நிலவரம் என்பது கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் 1.2 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜூலை மாதம் 1 க்கு பிறகு 1.4 சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதுவும் ஒருவகை காரணமாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் ஹெச்டிஎப்சி வங்கி தனது முதல் consolidated earnings குறித்த விபரத்தை அடுத்த மாதம் அறிவிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications