மீண்டும் இந்தி கட்டாயம்? சத்தமில்லாமல் மகாராஷ்டிர அரசு போட்ட உத்தரவு! எதிர்க்கட்சிகள் ஆவேசம்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மஹாயுதி அரசு, ஆரம்பப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியை மூன்றாவது மொழியாகக் கொண்டு வர மகாராஷ்டிர அரசு முயன்ற போது எதிர்ப்பு கிளம்பியதால் அப்போது அது கைவிடப்பட்டது. இதற்கிடையே மீண்டும் இப்போது இந்தியை மூன்றாவது மொழியாக மீண்டும் அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்மொழி கொள்கையின் ஒரு பகுதியா இந்தியை அம்மாநில அரசு கொண்டு வரத் திட்டமிட்டது. இருப்பினும், அதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

மீண்டும் இந்தி!
இதனால் அப்போது அந்த முடிவு கைவிடப்பட்டது. இதற்கிடையே மீண்டும் இப்போது அது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை மகாராஷ்டிராவில் கட்டாய மொழிகளாக இருக்கும். இந்தி கட்டாய மூன்றாவது மொழியாக இருக்காது என்ற போதிலும், இந்தியே டிபால்ட் மூன்றாவது மொழியாக இருக்கும்.
அதாவது குறைந்தது 20 மாணவர்கள் விரும்பினால், பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ் உள்ளிட்ட பிற மொழிகளைத் தேர்வு செய்யலாம். அதேநேரம் அப்படியே தேர்வு செய்தாலும் கூட இந்தி அல்லாத மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை மாநில அரசு ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆன்லைன் தளங்கள் மூலம் அந்தப் படிப்புகள் வழங்கப்படும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்த அறிவிப்பு வந்த உடனேயே மகாராஷ்டிர காங்கிரஸ் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல் கூறுகையில், "இது இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் முயற்சி. பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் 'ஒரே நாடு, ஒரே மொழி' என்ற சித்தாந்தத்தை மறைத்துத் திணிக்கின்றன. இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம், இதற்கு எதிராகப் போராடுவோம்" என்றார்.
சிவசேனா மற்றும் என்சிபி போன்ற பிராந்திய கூட்டணிக் கட்சிகள் மௌனம் காப்பது ஏன் என்றும் சப்கல் கேள்வி எழுப்பினார். மேலும், அவர்கள் மராத்தி பெருமையைச் சமரசம் செய்து கொண்டு, மாநிலக் கல்வி முறையில் இந்தி திணிக்கப்படுவதை அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ்
அதேநேரம் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் விளக்கமளித்தார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் தாய்மொழி (மராத்தி), உலக மொழி (ஆங்கிலம்), மற்றும் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றான இந்தி ஆகிய மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். ஆங்கிலம் கற்கும்போது ஏன் இந்தியை எதிர்க்க வேண்டும்?
மேலும், பள்ளிகள் விரும்பினால் மற்ற மொழிகளையும் வழங்கலாம்.. ஆனால் இந்தியைக் கற்பிக்க மட்டுமே மாநிலத்தில் போதுமான ஆசிரியர்கள் உள்ளனர். இது தொடர்பாக நான் நான் ராஜ் தாக்கரேவுடனும் பேசினேன், எதிர்க்கட்சிகள் இதைப் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்" என்றார். மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸும் மாநில அரசின் முடிவைச் சரி என்றே சொல்லியிருக்கிறார்.
அமைச்சர் தாதா பூஸ் சொல்வது என்ன
இது தொடர்பாக மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் தாதா பூஸ் மேலும் கூறுகையில், "பொது வாழ்வில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள இந்தி தான் பயன்படுத்தப்படுகிறது.. எனவே, இந்தி கற்றுக்கொள்வது முக்கியம்.. 12ம் வகுப்புக்குப் பிறகு, மத்திய அரசு மூன்றாம் மொழிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. இதனால் நமது மாணவர்கள் பின்தங்கக்கூடாது என்பதற்காகவே மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டோம். இந்தியை கற்றுக் கொள்வது மாணவர்களுக்குப் பலன் தரவே செய்யும்" என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இருப்பினும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. "குஜராத்தில் இந்தி கட்டாயமில்லை என்றால், மகாராஷ்டிராவில் ஏன் இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்? எந்த விதமான திணிப்பையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் எம்என்எஸ் கட்சி தொண்டர்கள் இந்திப் புத்தகங்களை எரித்து போராட்டம் நடத்தினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications