உச்சத்தை தொடும் வீடுகளின் விலை.. சர்வதேச அளவில் 2, 3வது இடத்தில் உள்ள இந்திய நகரங்கள் எவை தெரியுமா?
மும்பை: வீடுகளின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், சா்வதேச அளவில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்துள்ள முக்கிய நரங்களின் பட்டியல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன. அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கும் மிகப்பெரிய ஆசை. குறைந்த வட்டியில் கிடைப்பதால் கடன் வாங்கியாவது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பின்னர் வீடுகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், தற்போது வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேலான ஆடம்பர வீடுகளின் விற்பனை கிட்டத்தட்ட 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே பத்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை மதிப்பின் அடிப்படையில் சுமாா் ரூ. 12,300 கோடியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தை ஒப்பிடும்போது இது 8 சதவீதம் உயா்வாக உள்ளது. அப்போது, 10 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான விலை கொண்ட வீடுகள் 11,400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சர்வதேச அளவிலான வீடுகளின் விலை அதிகம் உயர்ந்த நகரங்களின் பட்டியலில் மும்பை இரண்டாமிடத்தையும், டெல்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதுகுறித்து, கிங் ஃப்ராங்க் சந்தை ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்துள்ள உலகின் முக்கிய 44 நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்தையும், டெல்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த 44 முக்கிய நகரங்களிலிலும் 2023 ஆம் ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிட்டால் 2024 ஆம் ஆண்டின் காலாண்டில் வீடுகளின் விலை உயா்வு 2.6 சதவீதமாக இருந்தது. ஆனால், இது முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டைவிட குறைவுதான். அப்போது, உலகின் முக்கிய 44 நகரங்களில் வீடுகளின் விலை உயா்வு 4.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடுகள் விலை உயா்வில் பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலா முதலிடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது மணிலாவில் 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வீடுகளின் விலை 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலாண்டில் மும்பை நகரில் வீடுகள் விலை 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் 10.6 சதவீதமாக இருந்தது.
முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டைவிட 2024 ஆம் ஆண்டு காலாண்டில் வீடுகள் விலை 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச தரவரிசையில் இதன் மூலம் பெங்களூரு 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications