மவுனமான பைலட்.. அந்தவொரு நிமிடம் தான்.. அஜித் பவாரின் விமான விபத்து எப்படி நடந்தது? DGCA விளக்கம்
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவாரின் தனி விமானம் பாரமதி ஏர்போர்ட்டில் தரையிறங்கும் போது வெடித்து சிதறியது. இதில் அஜித் பவார், 2 பைலட் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்த சம்வம் நாட்டையே உலுக்கி போட்டுள்ள நிலையில் விபத்து எப்படி நடந்தது? என்பது பற்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் திடுக்கிட வைக்கும் தகவல் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத கட்சியின் தலைவர் ஆவார். மும்பையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அஜித் பவார், இன்று காலை புனேயில் உள்ள பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார்.

பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், அவரது ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர், 2 பைலட்டுகள் என்று 5 பேரும் உடல் கருகி இறந்தனர்.
இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* விபத்தில் சிக்கிய விமானம் விஎஸ்ஆர் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் Learjet 45 ரக விமானமாகும்.
* இந்த விமானம் கடந்த 2010ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.
* இந்த விமான விபத்து பற்றி விமான விபத்து விசாரணை பணியகம் ( Aircraft Accident Investigation Bureau or AAIB) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
* இந்த விமானம் காலை 8:10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து பாரமதி விமான நிலையத்துக்கு புறப்பட்டது.
* மும்பையில் இருந்து சரியாக 256 கிலோ மீட்டர் தூரத்தில் பாராமதி உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 45 நிமிடங்கள் வரை ஆகும்.
* அஜித் பவாரின் தனி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அது கிளம்பியது தொடர்பான விவரத்தை பாராமதி விமான நிலையத்துக்கு பைலட்டுகள் தெரிவித்தனர்.
* பாராமதி விமான நிலையத்தில் இருந்து 55.6 கிலோ மீட்டர் தூரத்தில் விமானம் பறந்தது. விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை பைலட்கள் தொடர்பு கொண்டனர். அந்த நேரத்தில் புனே வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி கண்காணிப்பில் விமானம் விடப்பட்டது.
* பாராமதி பகுதியில் பனிமூட்டம் நிலவியது. இது பற்றி விமானத்தை இயக்கிய பெண் பைலட் ஷாம்பவி பதாக்கிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது பைலட், எந்த அளவு பனிமூட்டம் மற்றும் பார்க்கும் திறன் இருக்கிறது என்று கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கேட்டார்.
* கட்டுப்பாட்டு மைய அதிகாரி சுமார் 3000 மீட்டர் (3 கிலோ மீட்டர்) தூரத்துக்கு பார்க்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார். 3 கிலோ மீட்டர் பார்வை தெளிவு என்பது இதுபோன்ற சிறிய ரக விமானத்தை தரையிறக்க போதுமானது தான். இதனால் விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்தது.
* இதையடுத்து பைலட் பாராமதி விமான நிலையத்தில் ரன்வே நம்பர் 11ல் விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால் எதிர்பார்த்ததை விட பனிமூட்டம் அதிகமாக இருந்தது. ரன்வே தெளிவாக தெரியவில்லை. இதனால் தரையிறக்கும் நோக்கத்தில் விமானத்தின் உயரத்தை குறைத்த பைலட்டுக்கு ரன்வே-வை சரியாக பார்க்க முடியவில்லை.
* இதனால் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ரன்வே சரியாக தெரியவில்லை என்று கூறினார்.
* கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனே ‛Go Around' முறையில் விமானத்தை இயக்க பைலட்டுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இது ஒரு வழக்கமான நடைமுறை தான். விமானத்தை முதல் முயற்சியில்
தரையிறக்க முடியாத நேரத்தில் மீண்டும் வானை நோக்கி பறந்து சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் தரையிறங்க அனுமதிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் வானில் பறக்கும்படி கூறுவது தான் இந்த ‛கோ அரவுண்ட்' முறையாகும்.
* அதன்பிறகு சில வினாடிகளில் விமானம் மீண்டும் தரையிறங்க தயாரானது. பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். இப்போது ரன்வே கிளியராக தெரிகிறது என்று கூறினார். மேலும் தரையிறங்க அனுமதி கோரினார். உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. அப்போது நேரம் சரியாக காலை 8.34 மணியாகும்.
Press note on Learjet 45 Aircraft VT-SSK crash at Baramati Airport of M/s VSR Ventures Pvt Ltd pic.twitter.com/Exah9xCTBl
— DGCA (@DGCAIndia) January 28, 2026
* விமானம் தரையிறங்க அனுமதி கிடைத்தும் கூட விமானம் தரையிறங்கவில்லை. மேலும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தரையிறங்க அனுமதி கிடைத்த பிறகு அதனை பைலட் உறுதி செய்ய வேண்டும். ஆனால் பைலட்டிடம் இருந்து எந்த தகவலும் பரிமாறப்படவில்லை. விமானம் சைலன்ட் மோடுக்கு சென்றது. இதனால் பதற்றம் தொற்றியது.
* அதன்பிறகு அடுத்த ஒரு நிமிடத்தில் 8.44 மணிக்கு ரன்வே அருகே தீப்பிழம்பும், புகை மூட்டமும் தெரிந்தது. அப்போது தான் விமானம் ஓடுபாதை தெரியாமல் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியது தெரியவந்தது.
*ரன்வேயில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் விமானம் நொறுங்கியதும், ஏர்போர்ட் ஊழியர்கள், மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் ஸ்பாட்டுக்கு விரைந்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. உடனடியாக யாருக்கும் உதவி செய்ய முடியவில்லை. விமானத்தில் இருந்த அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரும் உடல் கருகி இறந்தனர்.'' என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் காலை நேரத்தில் இருந்த பனிப்பொழிவு மற்றும் விமான ஓடுபாதையை பைலட்டால் சரியாக பார்க்க முடியாதது தான் தான் விபத்துக்கு காரணம் என்பது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications