நெகிழ்ச்சி! பலரது வாழ்க்கையை மாற்றிய ஒற்றை ஆதார்.. குடும்பத்துடன் இணைந்தது எப்படி தெரியுமா! சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு ஆதார் மையம் மூலம் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் பலரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.

நாட்டில் இப்போது பெரும்பாலான சேவைகளுக்கு ஆதார் அடையாள அட்டை கேட்கப்படுகிறது. ஒருவருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில் இருக்கும் நம்பரில் மற்றொருவருக்கு வழங்கப்படாது.

ஒவ்வொருவருக்கும் தனித்துவமான எண் கொடுக்கப்படும் என்பதால் என்பதால் ஈஸியாக அடையாளம் காண முடியும். இதனிடையே மகாராஷ்டிராவில் ஆதார் அட்டையால் ஒரு குடும்பமே சேர்ந்துள்ளது.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் மான்காபூர் என்ற பகுதியில் ஆதார் சேவா கேந்திரா உள்ளது. ஆதாரில் தேவையான மாற்றங்களை இங்கு தான் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இந்த மையத்தின் மேலாளர் கெளரவ கேப்டன் அனில் மராத்தேவுக்கு வினோதமாகப் புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது 18 வயதான மனநலம் குன்றிய குழந்தைக்குப் பள்ளிப் படிப்பிற்காக ஆதார் கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

விசாரணை

விசாரணை

இருப்பினும், அந்த சிறுவனின் ஆதார் விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. அந்த சிறுவன், எட்டு வயதாக இருந்தபோது ஒரு ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டான். அதைத் தொடர்ந்து ஒரு அனாதை இல்லத்தில் அவர் வளர்ந்து உள்ளார். இந்தச் சூழலில் தான் அவரது பள்ளிப் படிப்பிற்காக ஆதார் கோரி விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், இதை மேனேஜர் விசாரித்து உள்ளார்.

யார்

யார்

அப்போது தான் அந்த சிறுவனுக்குக் கடந்த 2011ஆம் ஆண்டிலேயே ஆதார் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் அந்த சிறுவனின் பெயர் முகமது ஆமிர் என்பதும், அவர் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் வீட்டில் இருந்து காணாமல் போனதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த சிறுவனை குடும்பத்தினருடன் சேர்த்தனர். இதுபோல பல்வேறு நெகிழ்ச்சி சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன

 மற்றொரு சம்பவம்

மற்றொரு சம்பவம்

அதேபோல 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 21 வயது சிறப்பு குழந்தை ஒருவர், பீகாரில் உள்ள அவரது குடும்பத்துடன் இணையவும் ஆதார் தான் உதவி உள்ளது. பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயர் சூட்டப்பட்ட அந்த நபர், நவம்பர் 2016இல் 15 வயதாக இருந்தபோது நாக்பூர் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அவரது ரேகையை வைத்துத் தான் குடும்பத்தினருடன் அவரை சேர்த்துள்ளனர்.

ஆசிரமம்

ஆசிரமம்

இந்த தகவலைப் படித்த மகாராஷ்டிராவின் பன்வெல் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமம் மும்பையில் உள்ள ஆதார் மையத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், அங்கு தங்கள் ஆசிரமத்தில் இருக்கும் காணாமல் நபர்கள் குறித்தும் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கைரேகையை வைத்து ஆய்வு செய்யத் தொடங்கிய அதிகாரிகள் கொஞ்ச நேரத்திலேயே 25 பேரின் குடும்பத்தினரைக் கண்டுபிடித்துவிட்டனர்.

 சூப்பர் சம்பவம்

சூப்பர் சம்பவம்

அவர்களில் 7 பேர் ஏற்கனவே குடும்பத்தினர் உடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற 18 பேரின் குடும்பத்தினர் எங்கு உள்ளனர் என்பதைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களும் மிக விரைவில் கண்டறியப்பட்டு குடும்பத்தினருடன் இணைக்கப்படுவார்கள் என்றே அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+