இனவெறி அரசியல்.. தாக்கரே & கோவை தள்ளாட வைத்த தென்னிந்தியர்கள்! மும்பை பாஜக வசம் சென்றது இப்படி தான்!
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்த்து மொத்தம் 25 மாநகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இதுவரை தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியில் பாஜக முதன்முறையாக ஆதிக்கம் செலுத்தியிருப்பது மிக முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதற்கு தென்னிந்தியர்களின் வாக்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மகாராஷ்டிராவில் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி முதல்கட்டமாக நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 207 நகராட்சிகளை கைப்பற்றி ஏற்கனவே தனது வலிமையை நிரூபித்திருந்தது.
மும்பை மாநகராட்சி தேர்தல்
அதன் தொடர்ச்சியாக, கடந்த 15-ஆம் தேதி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சிகளுக்கு ஏற்ப அரசியல் கூட்டணிகள் மாறுபட்ட நிலையில், நேற்று வெளியான முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன. மும்பை மாநகராட்சியை எடுத்துக்கொண்டால், மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக தனியாகவே 87 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனுடன், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 27 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. மாநகராட்சியில் ஆட்சி அமைக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையை எட்டியுள்ளது.
பாஜக மும்பை வெற்றி
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 62 வார்டுகளிலும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சேர்த்து 15 வார்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. சுமார் 30 ஆண்டுகளாக தாக்கரே குடும்பத்தின் ஆதிக்கத்தில் இருந்த மும்பை மாநகராட்சியில், இப்போது பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பது அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மும்பையில் மொத்தம் 1.24 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
தாக்கரே அரசியல் தோல்வி
இவர்களில் மராத்தியர்கள் சுமார் 38 சதவீதம், குஜராத், உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 30 சதவீதம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்மாநில மக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்போக்கை தீர்மானித்த முக்கிய காரணங்களில் ஒன்றாக ராஜ் தாக்கரேவின் பேச்சுகள் குறிப்பிடப்படுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் வடமாநில மற்றும் தென்மாநில மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தென்னிந்தியர்கள் வாக்கு
இதன் விளைவாக, அந்த மக்களின் வாக்குகள் பெரும்பாலும் பாஜகவுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. இதற்கு மராத்தி பேசும் மக்களில் ஒரு பகுதியினரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தது சேர்ந்து, மும்பையில் பாஜக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மும்பை மட்டுமின்றி, புனே மாநகராட்சியில் உள்ள 165 வார்டுகளில் பாஜக 90 வார்டுகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நாக்பூர் மாநகராட்சியில் 151 வார்டுகளில் 104 வார்டுகளை பாஜக கைப்பற்றி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தாக்கரே குடும்ப அரசியல்
தானே மாநகராட்சியில் மொத்தம் 131 வார்டுகளில் பாஜக-ஷிண்டே அணி கூட்டணி 62 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டுகூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சத்ரபதி சாம்பாஜிநகர், நாசிக், நவி மும்பை, கல்யாண்-டொம்பிவிலி உள்ளிட்ட பல மாநகராட்சிகளிலும் பாஜக கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தத்தில், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிர அரசியலில் பாஜக தலைமையிலான கூட்டணியின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், தாக்கரே குடும்ப அரசியலுக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
-
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications