சாதாரண பள்ளி ஆசிரியை அம்பானியின் வீட்டு மருமகள் ஆனது எப்படி?
மும்பை: ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் விரைவில் ஃபிரி வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில ஆனந்த் அம்பானி அம்மாவான நீட்டா அம்பானி சாதாரண பள்ளி ஆசிரியை ஆவார். அவர் எப்படி அம்பானி வீட்டு மருமகள் ஆனார் என்பதை பார்ப்போம்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் வரும் மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை ஃபிரி வெட்டிங் நிகழ்ச்சிகள் (திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம்) நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், பிளாக்ராக் தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஃபிங்க் , பிளாக்ஸ்டோன் தலைவர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன், டிஸ்னி சிஇஓ பாப் இகர், மோர்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், பாங்க் ஆஃப் அமெரிக்கா தலைவர் பிரையன் தாமஸ் மொய்னிஹான் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.
இந்நிலையில் திருமண விழாவில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு விருந்து எப்படி இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.. அந்த அளவிற்கு இந்தியா முழுவதுதிலும் உள்ள புகழ்பெற்ற சமையல்காரர்களை வைத்து விருந்தை வைக்க போகிறார். இதேபோல் திருமண விழாவில் பங்கேற்க வருவோருக்கு பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பிரத்யேகமான மெழுகுவர்த்தி ஒன்றும் வழங்கப்பட உள்ளது.
அம்பானியின் பரம்பரையை பொறுத்தவரை, முகேஷ் அம்பானியின் குழந்தைகள் எல்லாருமே மிகப்பெரிய தொழில் அதிபர்களின் மகன் அல்லது மகள்களையே திருமணம் செய்துள்ளார். இப்போது ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ராதிகா மெர்ச்சன்ட் என்பவர் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார்.
ஆனால் இதில் முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும்.. அம்பானி வீட்டில் எல்லாருமே செல்வந்தர்கள் குடும்பத்தில் வந்தவர்கள் என்றாலும், முகேஷ் அம்பானி மட்டும் தன் மனைவியை செல்வந்தர்கள் குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கவில்லை.. முகேஷ் அம்பானியின் மனைவியான நீட்டா அம்பானி சாதாரண ஒரு பள்ளி ஆசிரியை ஆவார். இவர் பரத நாட்டிய கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின் போது நீட்டாவின் நடனத்தை கண்டு மெய்சிலிர்த்தவர் முகேஷ் அம்பானியின் தந்தையும் ரிலையன்ஸ் சாம்ராஜ்யாத்தை உருவாக்கியவருமான திருபாய் அம்பானி.. உடனே நீட்டாவை அழைத்த திருபாய் அம்பானி, நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா என்று கேட்டார்.. அடுத்த நாளே திருபாய் அம்பானியை நேரடியாக அலுவகத்திற்கு சென்று சந்தித்துள்ளார் நீட்டா..
அப்போது நேரடியாக திருமணம் குறித்து பேசிய திருபாய் அம்பானி, தன்னுடைய மூத்த மகன் முகேஷை தெரியுமா? அவரை சந்தித்து பேச உங்களுக்கு விருப்பம் உள்ளதா? என்று வேண்டுகோள் வைத்து கேட்டார். அதற்கு சட்டென பதில் சொன்ன நீட்டா, நான் தாராளமாக உங்கள் மகனை சந்திக்கிறேன் என்று கூறியதுடன், முகேஷை அவரது வீட்டில் போய் சந்தித்தார். பல கட்ட சந்திப்புக்கு பிறகு, நீட்டா ஒரு நிபந்தனையுடன் முகேஷை திருமணம் செய்ய சம்மதித்தார்.
அவர் போட்ட அந்த ஒற்றை நிபந்தனை என்னவென்றால், திருமணத்திற்கு பிறகும் ஆசிரியையாக நான் தொடர்வேன் என்பது தான். இந்த நிபந்தனையை அம்பானி ஏற்றுக்கொண்ட நிலையில், 1985ம் ஆண்டு முகேஷ் அம்பானிக்கும் சாதாரண பள்ளி ஆசிரியை நீட்டாவிற்கும் திருமணம் நடந்தது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார வீட்டு குடும்பத்தின் மருமகளாக மாறிய நீட்டா.. அதன்பிறகு நீட்டா அம்பானியானார். தான் சொன்னது போலவே சிறிது காலம் நீட்டா அம்பானி ஆசிரியையாக வேலை செய்த வந்த நிலையில், அதன் பின்னர் முழுமையாக ரிலையன்ஸ் குழுமத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். என்னதான் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலைகளை செய்தாலும், திருபாய் அம்பானி என்கிற சர்வதேச பள்ளியை நீட்டா அம்பானி உருவாக்கினார். நீட்டா அம்பானி நேரடியாக இந்த பள்ளியை கவனித்து வருகிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications