Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதல்வர் மனைவிக்கே வலை.. பட்னாவிஸ் மனைவியை சிக்க வைக்க முயன்ற அப்பா - மகள்.. மாட்டியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரர் அனில் ஜெய்சிங்கனி மும்பை போலீசார் மூலம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஹை ப்ரோபைல் வழக்கான இதில் அனில் ஜெய்சிங்கனி மற்றும் அவரது மகள் அனிஷிகா கைது செய்யப்பட்டது எப்படி என்ற விவரம் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டக்காரர் அனில் ஜெய்சிங்கனி கடந்த மார்ச் 20ம் தேதி மும்பை கிரைம் பிரிவு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சூதாட்டம், பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் பல்வேறு மாநிலங்களில் இவர் மீது உள்ளது.

How did police plan the operation with Amruta Fadnavis to arrest Anil Jaisinghani ?

போலீசில் இருந்து தப்பித்து இவர் குஜராத்தில் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில்தான் இவரும், இவரின் மகள் அனிஷிகாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

திருப்பங்கள்: சினிமா போல சுவாரசியமாக பல திருப்பங்களை கொண்ட இந்த வழக்கில் நேரடியாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா சம்பந்தப்பட்டு உள்ளார்.

அதன்படி அம்ருதா வாக்குமூலத்தின்படி 2021 நவம்பரில் அனிஷிகாவை அம்ருதா சந்தித்தார். அப்போது தன்னை ஆடைகள், காலணிகள் மற்றும் பைகளை வடிவமைக்கும் நபராக அனிஷிகா அறிமுகப்படுத்தி உள்ளார். 27 வயதான சட்டக்கல்லூரி மாணவியான அனிஷிகா பட்நாவிஸ் மனைவி அம்ருதாவிடம் தனக்கு தாய் இல்லை என்றும், அதனால் அம்ருதா தனது குடும்பத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் என் அப்பா மீது பல வழக்குகள் உள்ளன. அதில் இருந்து அவரை விடுவிக்க உதவுங்கள். உங்களுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும். நான் சில கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் பற்றி சொல்கிறேன். அதை போலீசில் சொன்னால் வேறு சிலரிடம் இருந்து நமக்கு பணம் கிடைக்கும். சில சூதாட்டகாரர்கள் கைது செய்யப்பட்டால் போட்டி சூதாட்டகாரர்கள் நமக்கு பணம் கொடுப்பார்கள்.

அதை வைத்து நாம் நிறைய சம்பாதிக்கலாம். அதில் வரும் பணத்தில் நான் உங்களுக்கு லஞ்சம் கொடுக்கிறேன், என்று கூறி உள்ளார். இதையடுத்து அம்ருதா - அனிஷிகா இதே விஷயத்தையும் வாட்ஸ் ஆப், போன் மூலம் தொடர்ந்து பேசி உள்ளனர். அதை எல்லாம் ரெக்கார்ட் செய்து அனிஷிகா.. அம்ருதாவை மிரட்ட தொடங்கி உள்ளார்.

நீங்கள் போனில் பேசியதை எல்லாம் வெளியே விட்டுவிடுவேன்.. உங்கள் பெயருக்குத்தான் அது களங்கம் விளைவிக்கும். அதனால் என் அப்பா மீதான 17 வழக்குகளை நீக்க நீங்கள்தான் வேலைகளை செய்ய வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து மும்பை மலபார் போலீசில் அம்ருதா அணில் குறித்தும், அனிஷிகா குறித்தும் ரகசியமாக பிப்ரவரி 20 தேதி புகார் அளித்தார்.

ஆபரேஷன்: இந்த புகாரின் முடிவில் தந்தை மற்றும் மகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120 பி (சதி), 383 (பணப்பறிப்பு) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல விதிகளின் ரகசிய வழக்கு பதியப்பட்டது. அதன்பின் அம்ருதாவிடம் பேசிய போலீசார்... நீங்கள் புகார் கொடுத்தது யாருக்கும் தெரிய வேண்டாம்.. அனிஷிகாவிடம் நட்பாக பேசி அணில் நம்பரை வாங்குங்கள்.

அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருங்கள். அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீங்கள் போனில் பேசினால் அவரை டிரேஸ் செய்ய முடியும் என்று கூறி உள்ளனர். இதை ஏற்றுக்கொண்டு அணிலை பிடிக்கும் போலீஸ் ஆபரேஷனில் அம்ருதா இறங்கி உள்ளார்.

பிப்ரவரி 20க்கு பின் அணிலிடம் பேசிய அம்ருதா.. எந்த வழக்கிலாவது நீங்கள் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தா, நான் தேவேந்திர ஜியிடம் (ஃபட்னாவிஸ்) பேசி உங்களுக்கு நீதி வாங்கி தருவேன். ஆனால் அதற்காக உங்கள் மகள் என்னை மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் மிரட்டல்களுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

நீங்களும் அனிஷிகாவும் என்னை பிளாக்மெயில் செய்யும் நோக்கத்துடன் முதல் நாளிலிருந்தே செயல்பட்டுள்ளீர்கள். நீங்கள் என்னை அவமானப்படுத்தினாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டேன். நீங்கள் தவறு செய்யவில்லை என்றால் நான் உங்களுக்கு உதவுவேன் என்று கூறி உள்ளார்.

போலீஸ் உத்தரவின்படி தொடர்ந்து பேசிய அம்ருதா தனக்கும் தனது கணவர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை என்றும் கூறியுள்ளார். அணிலிடம் அம்ருதா இப்படி சொன்னது போலீஸ் வழிகாட்டுதலின்படி என்று போலீசார் கூறியுள்ளார்.

ஃபோனில் பேசுவதற்குப் பதிலாக, ஏதாவது இடத்தில் அனிஷிகாவை நான் சந்திக்க தயார். நானும் தேவேந்திர பட்நாவிசும் நல்ல உறவில் இல்லை. 2019ல் இருந்து நாங்கள் சரியாக பேசுவது இல்லை. நாங்கள் பிரிந்தாலும் கூட பிரிய வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்களுக்கு அவர் நீதி கிடைக்க உதவியாக இருப்பார் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அனில் ஜெய்சிங்கனியிடம் அம்ருதா பேச அதை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து உள்ளனர். குஜராத்தில் அவர் தலைமறைவாகி இருந்ததை போலீசார் கண்டுபிடித்த நிலையில் கடந்த மார்ச் 16ம் தேதி அனிஷிகாவையும் , மார்ச் 20 தேதி அணியையும் போலீசார் கைது செய்தனர்.

அங்கே மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் வழக்கில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+