மும்பை மேயர் யார்? ஒரு சிறுவன் எடுக்கும் சீட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்!
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்றது. இருப்பினும், இதுவரை மும்பை மேயர் யார் என்பதில் விடை கிடைக்கவில்லை. அங்கு மும்பை மேயரை தேர்வு செய்ய இருக்கும் சில விதிமுறைகளே இதற்கு காரணமாகும்! இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியான பி.எம்.சி-யின் (BMC) புதிய மேயர் யார் என்பதை அறிய இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

மும்பை மேயர்
வெற்றி பெற்ற 'மகாயுதி' கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா இடையே மேயர் பதவிக்காகக் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், அரசியல் காரணங்களைத் தாண்டி, சட்டப்பூர்வமான சில நடைமுறைகளே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம். சட்டப்படி, மும்பை மேயர் பதவி என்பது சுழற்சி முறையில் இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதற்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பெண்களுக்குச் சுழற்சி முறையில் பதவி ஒதுக்கப்படும். இந்த இடஒதுக்கீடு எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, 'குலுக்கல் முறை' மூலம் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் தீர்மானிக்கப்படும். இந்தக் குலுக்கல் முடிந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே, கட்சிகளால் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க முடியும்.
லாட்டரி
அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய மும்பையில் 2.5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேயர் லாட்டரி நடத்தப்படும். இந்தக் குலுக்கல் பொதுமக்களின் முன்னிலையிலோ அல்லது மாநகராட்சி அலுவலகத்திலோ நடைபெறும் நாள் மற்றும் நேரம் அறிவிக்கப்படும். ஒவ்வொரு இடஒதுக்கீடு பிரிவின் பெயர்களும் தனித்தனி காகிதச் சீட்டுகளில் எழுதப்பட்டு, அவை மடிக்கப்பட்டு ஒரு வெளிப்படையான பாத்திரத்தில் அல்லது பெட்டியில் போடப்படும். எந்தவிதமான முறைகேடும் நடக்கக்கூடாது என்பதற்காக, பொதுவாக அங்கிருக்கும் ஒரு சிறு குழந்தையை அழைத்து ஒரு சீட்டை எடுக்கச் சொல்வார்கள்.
குழந்தை எடுக்கும் சீட்டில் என்ன பிரிவு எழுதப்பட்டுள்ளதோ (உதாரணமாக: 'பொதுப் பிரிவு - பெண்' அல்லது 'பட்டியல் சாதியினர்'), அதுவே அந்த இரண்டரை ஆண்டுகள் மும்பை மேயர் பதவிக்கான இடஒதுக்கீடாக இறுதி செய்யப்படும். தற்போது 2026 மும்பை மேயர் தேர்தலுக்கான குலுக்கல் ஜனவரி 2026-ன் இறுதி வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.
கடந்த காலங்கள்
இதற்கு முன்பும் மும்பையில் 2017ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அப்போது ஒரு முறை லாட்டரி நடத்தப்பட்டது. அதேபோல 2.5 ஆண்டுகள் கழித்து 2019ம் ஆண்டிலும் லாட்டரி முறை நடத்தப்பட்டது. மும்பை மாநகராட்சி பள்ளியில் இருந்து அழைத்து வரப்படும் மாணவரே இந்த லாட்டரியை எடுப்பார். கடந்த 2017 மற்றும் 2019 என இரண்டு முறையும் லாட்டரியில் பொது பிரிவினர் என்ற லாட்டரியே எடுக்கப்பட்டது. அதாவது "பொது பிரிவு" சீட்டு வந்தால் எந்தவொரு பிரிவைச் சேர்ந்தவரும், ஆண்- பெண் என இருவரில் யார் வேண்டுமானாலும் மேயராக தேர்வாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது தெரியும்!
மும்பை மேயர் என்பவர் நகரின் 'முதல் குடிமகன்' மற்றும் கவுரவத் தலைவர் ஆவார். 227 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், 114 உறுப்பினர்களின் ஆதரவு பெறுபவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசால் நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரியான, மாநகராட்சி ஆணையரிடமே இருக்கும். குலுக்கல் முறை முடிந்து, இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட ஒரு வாரக் காலத்திற்குள் மும்பைக்கான புதிய மேயர் யார் என்பது தெரிந்துவிடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications