காதலியாகவே இருந்தாலும் "இந்த" விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. பிரபல ஹீரோ போட்ட கண்டிஷன்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனது காதலிக்கே வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். வீட்டில் வசிக்க அவர் மாதம் ரூ.75 ஆயிரம் வாடகை செலுத்த வேண்டுமாம். யார் அந்த பாலிவுட் நடிகர்.. எதற்காகத் தனது காதலிக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே சினிமா நட்சத்திரங்கள் சின்ன விஷயத்தைச் செய்தாலும் அது மிகப் பெரியளவில் எதிரொலிக்கும். சினிமா நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சமே இதற்குக் காரணமாகும். அதிலும் குறிப்பாகப் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்கள் செய்யும் எல்லா விஷயங்களும் பேசுபொருளாகும்.

பாலிவுட் பிரபலம்
அப்படி பாலிவுட்டின் டாப் ஹீராவாக வலம் வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவரும். அது மக்களிடையே எப்போதும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருக்கும்.. இந்தச் சூழலில் அவரது குடியிருப்பு குறித்து வெளியான தகவல் பரவலாகக் கவனம் ஈர்ப்பதாக இருக்கிறது.
அதாவது மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள ஆடம்பரக் குடியிருப்பு ஒன்று ஹிரித்திக் ரோஷன் வசம் இருக்கிறது. கடற்கரை வியூ உடன் இந்தப் பங்களா பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும்.. இந்தப் பங்களாவை ஹிருத்திக் ரோஷன் தனது காதலிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். பொதுவாக காதலி தங்கள் குடியிருப்பில் இருந்தாலும் பலரும் பணம் எதுவும் வாங்க மாட்டார்கள். ஆனால், ஹிரித்திக் ரோஷன் தனது காதலியிடம் இருந்தும் வாடகையைப் பெறுகிறாராம்.
ரூ.75,000 வாடகை
தனது காதலி சபா ஆசாத் என்பவருக்கு ஹிருத்திக் ரோஷன் மாதம் ₹75,000க்கு இந்தப் பங்களாவை வாடகைக்கு விட்டுள்ளார். இந்தத் தகவல் ஸாப் கீ நிறுவனம் வெளியிட்ட ஆவணங்களில் தெரிய வந்துள்ளது. மும்பையில் ஜூஹு - வெர்சோவா இணைப்புச் சாலையில் அமைந்துள்ள மன்னத் அபார்ட்மெண்ட்ஸ் (வர்த்தமான்) வளாகத்தில் இந்தக் குடியிருப்பு உள்ளது. இது மும்பையின் மிக விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றாகும்.
இப்பகுதியில் 1,000 முதல் 1,300 சதுர அடி பரப்பளவு கொண்ட 3 படுக்கையறை குடியிருப்புகளின் மாத வாடகை ₹1 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை இருக்குமாம். ஆனால், ஹிரித்திக் ரோஷன் தனது காதலிக்காக ரூ.75,000க்கு மட்டும் வாடகைக்கு விட்டிருக்கிறார். லீவ் மற்றும் லைசென்ஸ் ஒப்பந்தத்தின்படி, இம்மாத தொடக்கத்தில் சபா ஆசாத் இந்தக் குடியிருப்பிற்காக ₹1.25 லட்சம் வைப்புத் தொகை செலுத்தியுள்ளார்.

ஹிருத்திக் முதலீடுகள்
அதேநேரம் ஹிரித்திக் இந்த வீடு மட்டுமில்லாமல் பல்வேறு குடியிருப்புகளில் முதலீடு செய்திருக்கிறார். கடந்த 2020 அக்டோபரில், ஹிருத்திக் ரோஷன் இங்கேயே மூன்று குடியிருப்புகளை வாங்கியிருந்தார். 18வது தளத்தை முழுமையாகவும் 19 மற்றும் 20ம் தளங்களில் இரு அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகியவையும் அவர் வாங்கியிருந்தார். சமீர் போஜ்வானி என்ற பில்டரிடம் இருந்து ₹97.5 கோடிக்கு ஹிருத்திக் இந்தக் குடியிருப்புகளை வாங்கினார்.
மும்பை ரியல் எஸ்டேட் மார்கெட்
ரோஷன் குடும்பம் நீண்ட காலமாகவே மும்பையின் ரியல் எஸ்டேட் மார்கெட்டில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2025 மே மாதத்தில், ஹிருத்திக்கும் அவரது தந்தை ராகேஷ் ரோஷனும் அந்தேரியில் மூன்று குடியிருப்புகளை ₹6.75 கோடிக்கு விற்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், கோரேகானில் 2,727 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆபீஸ் கட்டிடத்தை ஹிருத்திக் மாதம் ₹5.62 லட்சம் வாடகைக்கு எடுத்தார். மேலும், பிப்ரவரி மாதம் புனே கராடியில் உள்ள 9,209 சதுர அடி வணிக வளாகத்தின் குத்தகை ஒப்பந்தத்தை மாதம் ₹6.08 லட்சத்திற்குப் புதுப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications