Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனிச்சீங்களா.. வாயை தொறந்தாலே இப்படித்தான்.. கங்கனா ராவத் போட்ட பதிவு.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்

நாட்டின் சக்திவாய்ந்த பெண் என்று தன்னை கூறி கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மும்பை: "நான் ஒரு சக்திவாய்ந்த பெண்" என்று கங்கனா ராவத் தன்னை தானே புகழ்ந்து இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

நடிகை கங்கனா ராவத்.. இவர் தீவிரமான பாஜக ஆதரவாளர் ஆவார்.. சமீபத்தில்தான் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.. சோஷியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருபவர்.. ''இந்தியாவுக்கு 2014-ம் ஆண்டு தான் சுதந்திரம் கிடைத்தது...

1947-ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சை'' என்று ஒருமுறை கங்கனா சொல்லி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் இவர் விமர்சித்தார்...

 கருத்து

கருத்து

"இது 'துக்ககரமான, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது'.. நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல், தெருக்களில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், இதுவும் ஜிஹாதி தேசம்தான். இப்படி விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்... இதனால், கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் தந்த நிகழ்வும் உண்டு.

 சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

இந்நிலையில், கங்கனாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... அதில் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருந்திட கங்கனாவின் சோஷியல் மீடியா பதிவுகளை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, விவசாயிகள் குறித்தும் அவர்கள் போராட்டம் குறித்தும் நடிகை கங்கனா கூறிய சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகாரில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் மீது முறையாக குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 ட்வீட்கள்

ட்வீட்கள்

இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், திடீரென இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டுள்ளார் கங்கணா.. "நாட்டின் சக்தி வாய்ந்த பெண்" என்று தன்னைத்தானே அந்த ட்வீட்டில் அறிவித்துக்கொண்டுள்ளார்... சுப்ரீம்கோர்ட்டில் இவர் மீது புகார் மனு சென்றிருக்கும் நிலையில், அதன் வழக்கு விசாரணையே இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், சக்தி வாய்ந்த பெண் என்று இவரே தன்னை சொல்லி கொண்டுள்ளது மறுபடியும் பரபரப்பை கூட்டி வருகிறது. இப்படித்தான் எதையாவது அடிக்கடி சொல்லி ட்விட்டரில் ட்வீட்களை பதிவிட்டு கொண்டிருந்தார்..

சர்ச்சை

சர்ச்சை

பீகார் தேர்தலின்போது, சுஷாந்த் சிங் விவகாரத்தை ஊதி பெரிதாக்கி திசை திருப்ப முயன்றதே கங்கனாதான்.. சிவசேனா தலைவரை சஞ்சய் ராவத் மிரட்டல் விடுக்கிறார் என்று சொல்லி மொத்த மீடியாவையும் மிரள வைத்ததும் கங்கனாதான்.. மக்கள்தொகையை கட்டுப்படுத்த, 3வது குழந்தை பிறந்தால் அபராதம் அல்லது ஜெயில் தண்டனை தர வேண்டும் என்று கிளப்பிவிட்டதும் கங்கனாதான். இதனாலேயே இவரது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக மூடப்பட்ட சம்பவமும் உண்டு.. இப்போது மறுபடியும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அதிரடியை ஆரம்பித்துள்ளார்.. இது எங்கே போய் முடிய போகுதோ?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+