பிரேமலதா விஜயகாந்த் கூட பரவா இல்லப்பா.. பாஜக, இந்தியா அணியிலும் என்சிபி- சரத்பவார் உலகமகா முடிவு!
மும்பை: தேசியவாத காங்கிரஸ் ( என்சிபி) கட்சியில் அஜித்பவார் தனியாக பிரிந்து செல்லவும் இல்லை; என்சிபி இரண்டாக உடையவும் இல்லை; எங்கள் கட்சியின் சிலர் மட்டும் பாஜகவை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளனர் என அக்கட்சித் தலைவர் சரத்பவார் கொடுத்துள்ள விளக்கம் "இந்தியா" கூட்டணி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் என்சிபி முக்கிய கட்சியாகவும் சரத்பவார் முதன்மையான தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அதேநேரத்தில் என்சிபியின் அஜித்பவார் மற்றும் சிலர் மகாராஷ்டிரா பாஜக அரசில் இணைந்துள்ளனர். அஜித் பவார் துணை முதல்வராகி இருக்கிறார்.

தேர்தலுக்காக என்சிபியை பாஜக இரண்டாக உடைத்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. சரத்பவாரும் கூட, அமலாக்கத்துறைதான் யார் யார் எந்தெந்த கட்சியில் சேர வேண்டும் என முடிவு செய்கிறது என விமர்சித்திருந்தார்.
அதேநேரத்தில் சரத்பவாரை சமாதானப்ப்டுத்தி ஒட்டுமொத்த என்சிபியையும் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்றி பாஜக கூட்டணிக்கு அழைத்துச் செல்வதில் அஜித்பவார் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பாக சரத்பவாரை தொடர்ந்து சந்தித்தும் பேசி வருகிறார்.
இம்மாத இறுதியில் மும்பையில் "இந்தியா" கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் என்சிபியை பாஜக பக்கம் இழுத்துப் போய்விடுவது என்பது அஜித்பவாரின் அஜெண்டாவாகவும் இருக்கிறது. அவரது இந்த முயற்சி அனேகமாக வெற்றி பெற்றதாகவே தெரிகிறது. கடந்த சில நாட்களாக தேசியவாத காங்கிரஸின் தலைவர்களான சரத்பவாரும் சுப்ரியா சுலேவும் பேசி வரும் கருத்துகள ":இந்தியா" கூட்டணி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சரத்பவாரின் மகளான லோக்சபா எம்பி சுப்ரியா சுலே கூறுகையில், தேசியவாத காங்கிரஸில் எந்த பிளவும் இல்லை. பாஜக ஆட்சிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களை அந்த கட்சி இழுத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். பாஜகவை ஆதரிப்பது என ஒரு நிலைப்பாடுதான் எடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் தேசியவாத காங்கிரஸ்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் வலியுறுத்துவோம் என்றார்.
இன்று சரத்பவாரும் இது தொடர்பாக கூறுகையில், என்சிபியில் ஒரு பிளவும் இல்லை. ஒரு சிலர் பாஜகவை ஆதரிக்கிறார்கள். அவ்வளவுதான். அஜித்பவார் எங்க கட்சித் தலைவர்தான். அவர் பாஜகவை ஆதரிக்கிறார். எங்க கட்சியில் எந்த பிளவுமே இல்லை. பாஜகவை ஆதரிக்கிறாகள் என்பதாலேயே என்சிபி இரண்டாக பிளவுபட்டுவிட்டதாக சொல்ல முடியுமா? பாஜகவுக்கு ஆதரவு என்பது அவர்களது முடிவு.. அவ்வளவுதான் என்றார்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும். தேர்தலின் போது கடைசி நிமிடம் வரை இப்படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கும். பின்னர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிடும் தேமுதிக. ஆனால் சரத்பவாரோ, பாஜக அணியிலும் எங்க கட்சியினர் இருப்பாங்க.. இந்தியா கூட்டணியிலும் இருப்பாங்க என மதில் மேல் பூனையாக பேசியிருப்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications