முதல்வர் வேட்பாளர்.. உத்தவ் தாக்கரே ஷாக் அறிவிப்பு..திக்கு முக்காடும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் "மகா விகாஸ் அகாடி" கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவுகான் யாரை அறிவித்தாலும் ஆட்சேபனை தெரிவிக்காமல் ஏற்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில் ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும்; மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதிகளை பின்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இந்த கூட்டணிக் கட்சிகளிடையே பிளவு ஏற்படலாம் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு.
இந்த நிலையில் மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே முதல்வர் வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் பிருத்விராஜ் சவுகான் ஆகியோர் தங்களது முதல்வர் வேட்பாளராக யாரை வேண்டுமானாலும் அறிவிக்கட்டும்; அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் ஏற்க சிவசேனா தயார். எங்களுக்கு தனிநபர் விருப்பங்கள் முக்கியம் அல்ல. தற்போதைய பாஜக கூட்டணி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இலக்கு. ஆகையால்தான் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் முதல்வர் வேட்பாளரை முன்வைத்து பிளவுகள் வந்துவிடக் கூடாது என்றார் உத்தவ் தாக்கரே.
என்னதான் உத்தவ் தாக்கரே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இதன் மூலம் நெருக்கடியை கொடுத்திருக்கிறார் உத்தவ் தாக்கரே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாது; தம்மைத்தான் முதல்வர் வேட்பாளராக அந்த கட்சிகள் ஆதரித்தாக வேண்டும் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டுதான் நீங்கள் யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம்.. ஆதரிக்க தயார் என அறிவித்துள்ளார் உத்தவ் தாக்கரே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications