ஜடேஜா மீது பாய்ந்த ஐசிசி “ஆக்ஷன்”.. “ஆயின்மெண்ட்” தடவியது குத்தமா! 25% அபராதம் - நடந்தது என்ன?
நடுவரின் அனுமதி இல்லாமல் விரலில் வலி மருந்து தடவியதற்காக இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ஐசிசி 25% அபராதம் விதித்துள்ளது.
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் அனுமதி இல்லாமல் விரலில் வலி மருந்து தடவியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு இந்த போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதம் விதித்து இருக்கும் ஐசிசி, அவருக்கான ஒரு புள்ளியையும் குறைத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
கடந்த வியாழன் அன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்கியது.

ஆஷஷுக்கு இணையான போட்டி
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவில் முன்னாள் நட்சத்திர வீரர் பார்டர் ஆகியோரின் பெயரில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அளவுக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இரு நாட்டு வீரர்களும் இதில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தொடரில் பங்கேற்று உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் வென்றால் இந்தியா சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆரம்பமே விக்கெட்
ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான சிராஜும் ஷமியும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை ஒரு ரன் எடுத்த நிலையில் அவரை சிராஜ் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் முஹம்மது ஷமியின் பந்து வீச்சில் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா
அடுத்து லபுஷேனுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில், ரவீந்திர ஜடேஜா ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். ரென்ஷா, ஹேண்ட்ஸ்கூம்ப், மர்பி ஆகியோரும் அவரது பந்துவீச்சிலேயே நடையை கட்டினார்கள். அலெக்ஸ் கேரே, பேட் கம்மின்ஸ், போலேண்ட் ஆகியோர் ஆஸ்வின் ஓவரில் ஆட்டமிழக்க அந்த அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரோகித் ஷர்மா சதம்
இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடி 120 ரன்களை குவித்தார். ஆனால், கே.எல்.ராகுல், அஸ்வின், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பரத் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்குள் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் டாப் ஆர்டர் ஆட்டம் கண்டது. இதனை ரவீந்திர ஜடேஜா - அக்ஷர் பட்டேல் ஜோடி தூக்கி நிறுத்தியது.

400 ரன் குவித்த இந்தியா
ஜடேஜா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த அக்ஷர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்த முஹம்மது ஷமி வானவேடிக்கை காட்டினார். 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் மர்பியின் ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து அக்ஷர் பட்டேல், 84 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 400 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
இதனை தொடர்ந்து 2 வது இன்னிங்சை விளையாட தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை விட மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர், லபுசேன், ஸ்மித், அலெக்ஸ் கேரே ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க அந்த 91 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகள், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

என்ன தடவினார் ஜடேஜா?
மொத்தம் 7 விக்கெட்டுகளையும் 70 ரன்களையும் குவித்த ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில், இப்போட்டியில் அவரது ஒரு நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சிராஜின் கையில் ஏதோ ஒன்றை எடுத்து ஜடேஜா தனது விரலில் தடவியதை ஜூம் செய்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரேட் ஹாக், டிம் பெயின் மற்றும் ரசிகர்கள் அவர் பாலை டாம்பர் செய்ததாக குற்றம்சாட்டினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications