ராமரை இழிவு செய்த நாடகம்! 8 பேருக்கு 1.2 லட்சம் அபராதம்! ஐஐடி பாம்பே அதிரடி
மும்பை: ராமரையும் சீதையையும் கிண்டல் செய்து நாடகம் போட்ட பட்டதாரி மாணவர்களுக்கு ஐஐடி பாம்பே 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்தச் செயல் நாடு முழுவதும் கல்வியாளர்கள் மத்தியில் ஒருவித எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் மிகவும் பிரபலமானது ஐஐடி பாம்பே. இந்த உயர்கல்வி நிறுவனம் 1958 இல் தொடங்கப்பட்டது. அப்போது இதில் 100 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். ஆனால், இன்று இந்தக் கல்வி நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து புகழ்பெற்றுள்ளது. இந்தக் கல்வி வளாகத்திற்குக் கிட்டத்தட்ட 585 கட்டடங்கள் இயங்கி வருகின்றன.

உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி படிப்புக்காக இங்கே வந்து சேர்ந்து கல்வி கற்று வருகின்றன. எந்தளவுக்குப் புகழைச் சம்பாதித்துள்ளதோ அதே அளவுக்கு இந்த நிறுவனம் சர்ச்சைகளையும் கண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இப்போது மும்பை ஐஐடிக்குள் ஒரு சர்ச்சை புயல் மையம் கொண்டுள்ளது.
கடந்த மார் 31 ஆம் தேதி இந்த இன்ஸ்டிடியூட் கலைநிகழ்ச்சியில் சில மாணவர்கள் தாங்கள் எழுதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். 'ராஹோவன்' என்ற தலைப்பிலான அந்த நாடகம் பல வகைகளில் சர்ச்சைகள் நிறைந்ததாக இருந்துள்ளது. அதில், ராமரும் சீதையும் கிண்டல் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சக மாணவர்களே அதை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர். நாடகம் சர்ச்சையானதைத் தொடர்ந்து ஐஐடி மும்பை நிர்வாகம் அது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளது.
ஒரு பிரிவினர் இந்த நாடகத்தை ஆதரித்த போதும் மற்றொரு பிரிவினர் இது குறித்துப் புகாரளித்துள்ளனர். இது மதிப்புக்குரிய இந்து இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த நாடகம் என்றும் ஆனால், இந்து நம்பிக்கைகளையும் தெய்வங்களையும் இழிவுபடுத்தும் விதமாக அதில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது என்றும் அந்த மாணவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
"பெண்ணியத்தை ஊக்குவித்தல்" என்ற போர்வையில் நடத்தப்பட்ட இந்த நாடகம் ராமாயணத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களை இழிவு செய்துள்ளது. மேலும் கலாச்சார விழுமியங்களைக் கேலி செய்வது போல வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது என மாணவர்கள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மாணவர்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பு காரணமாக, ஐஐடி மும்பை ஒரு ஒழுங்குக் குழுவை மே 8 கூடி விவாதித்துள்ளது. அதன் விளைவாக ஜூன் 4 ஆம் தேதி அன்று இந்த நாடகத்தை அரங்கேற்றிய 8 மாணவர்களுக்கு தலா 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆனால், இதே சர்ச்சை பற்றி வெளியாகியுள்ள வேறு செய்திகளில் 4 மாணவர்களுக்கு மட்டுமே அபராதம் வித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சர்ச்சை குறித்து என்.டி மற்றும் பிசினஸ் டுடே போன்ற ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஊடகங்களுக்குப் பேசியுள்ள எந்த மாணவர்களும் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. புகார் அளித்த மாணவர்களில் பெண் ஒருவர் உள்ளார் என்று தெரிகிறது. ஐஐடி பாம்பேயில் உள்ள அம்பேத்கர் பெரியார் புலே படிப்பு வட்டத்தைச் சேர்ந்த (APPSC) மாணவர் ஒருவர் நாடகத்தை வழங்கியதற்காக மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இது ஒரு இடதுசாரி மாணவர் அமைப்பாகும். அதற்கான எக்ஸ் பக்கம் கூட உள்ளது. ஆனால், அதில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய வீடியோ பதிவுகள் உள்ளன. இந்த ராமர் நாடகம் சர்ச்சை பற்றி ஒரு பதிவையும் காணவில்லை.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேசியுள்ள மாணவர் ஒருவர், "இந்தப் புகாரைத் தொடர்ந்து, 8 மாணவர்களுக்கும் தலா ரூ.40,000 முதல் ரூ.1,20,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அது உண்மை" எனக் கூறியுள்ளார். ஜூன் 4 தேதியிட்ட ஐஐடி பாம்பே பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ஜூலை 30 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அபராதத்தைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க ஐஐடி பாம்பே மறுத்துள்ளது.
"ராமாயணத்தை இழிவான முறையில் சித்தரித்த 'ராஹோவன்' நாடகத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஐஐடி பாம்பே நிர்வாகம் எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை வரவேற்கிறோம். இந்த மாணவர்கள் தங்கள் கல்விச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ராமர், சீதை, லக்ஷ்மணன் ஆகிய தெய்வங்களைக் கேலி செய்துள்ளனர்" என ஐஐடி பாம்பே ஃபார் பாரத் என்ற சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் ஜூன் 19 அன்று ஒரு பதிவு வெளியாகியுள்ளது.
இந்த எக்ஸ் கணக்கு இந்திய நாகரிக மதிப்புகளுக்கு பொதுவான இடத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டர்களின் குழுவாகத் தன்னை பற்றிய அறிமுகத்தை வழங்கியுள்ளது.
இந்த நாடகத்தை இந்து மத அவமதிப்புச் செயல் என்று கூறி அதில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 8ஆம் தேதி இந்தக் குழுதான் கோரிக்கை வைத்துள்ளது. "வளாகத்தில் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதமும் கேலி செய்யப்படுவதைத் தடுப்பதற்காக வழிகாட்டுதல்களை வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என ஐஐடி பாம்பே நிர்வாகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த நடவடிக்கை மற்றும் ஆட்சேபனைக்குரிய பிஏஎஃப் நிகழ்வு தொடர்பான மன்னிப்பு கடிதம் ஒன்றை ஐஐடி பாம்பே நிர்வாகத்திடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களுக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, இரண்டு விதமான வெவ்வேறு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்று தெரிகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications