பாம்பே ஐஐடி மாணவன் இறப்பு தற்கொலை அல்ல, கொலை! 7ஆவது மாடின்னா காயம் எங்கே? சந்தேகம் கிளப்பும் சகோதரி
பாம்பே ஐஐடி கல்வி நிறுவன மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார்
மும்பை: பாம்பே ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவர் தர்ஷன் சோலங்கி இறந்தது தற்கொலையால் அல்ல, அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என அவருடைய சகோதரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், பாம்பே ஐஐடியில் பிடெக் படிப்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார்.
ஐஐடி நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி தர்ஷன படித்து வந்தார். இதனிடையே கடந்த சில வாரங்களாகவே தர்ஷன் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார்.

முதலாமாண்டு தேர்வு
முதலாமாண்டு செமஸ்டர் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதையடுத்து விடுதி மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். சில மாணவர்கள் மட்டும் விடுதியில் இருந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மதிய உணவுக்காக மாணவர்கள் சென்றிருந்தனர். அப்போது விடுதியின் 7ஆவது மாடியிலிருந்து தர்ஷன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

சப்தம்
சப்தம் கேட்டதும் மற்ற மாணவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது தர்ஷன் தலையில் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து மற்ற மாணவர்கள் தர்ஷனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் பாம்பே ஐஐடி வளாகத்தில் வந்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை
இந்த நிலையில் மாணவன் தர்ஷன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. எனினும் தனது மகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என தெரியவந்ததால் அவருடன் நண்பர்கள் யாரும் பேசாமல் ஒதுக்கி வைத்ததும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதுமே காரணம் என தர்ஷனின் தந்தை தெரிவித்திருந்தார். எனினும் இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை அல்ல, கொலை
இந்த நிலையில் தங்களது தம்பியின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என தர்ஷனின் சகோதரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தர்ஷன் சோலங்கியின் சகோதரி ஜான்வி சோலங்கி கூறுகையில் என் தம்பி மரணம் தற்கொலை அல்ல, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. என் சகோதரர் மனதளவில் எப்போதும் உறுதியாகவே இருப்பார். உணர்ச்சிவயப்பட கூடிய நபரே கிடையாது.

ஜாதிய பாகுபாடு
ஜாதிய பாகுபாடு பார்ப்பதாக என்னிடம் பேச்சுவழக்கில் சொன்னார். ஆனால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அவரும் அதை ஒரு புகாராக என்னிடம் சொல்லவில்லை. எனது தம்பி ஐஐடி மும்பையில் சேர வேண்டும் என்பதற்காகவே எந்த டியூஷனுக்கும் செல்லாமல் இரண்டாவது முயற்சியில் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவு கல்லூரியில் இணைந்தார். அப்படிப்பட்ட நபர் மனம் உடைந்து தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை.

பட்டியலினம்
தான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என தெரிந்ததால் தன்னை எத்தனை மாணவர்கள் வெறுத்தார்கள், தான் உதவி கேட்டாலும் செய்ய மாட்டார்கள், தன்னிடம் முன்பிருந்த அணுகுமுறையை கூட மாற்றிவிட்டார்கள் என என்னிடம் கூறியிருந்தார். அப்படியே பாகுபாடு பார்த்திருந்தாலும் என் தம்பி தற்கொலை செய்து கொள்ள வாய்பபே இல்லை, எனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை. ஆனால் அவரை யாரோ பின்புறம் இருந்து தலையில் அடித்தே கொன்றுள்ளனர் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது என்றார்.

போலீஸார் கருத்து
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பாம்பே ஐஐடியில் ஜாதிய பாகுபாடு பார்த்ததாக சோலங்கியின் பெற்றோர் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது தவறான தகவல். அவர்கள் இதுவரை அப்படி ஒரு புகரை கொடுக்கவில்லை. எனவே ஆதாரம் இல்லாமல் யாரும் புகாரை பரப்ப வேண்டாம். மும்பையில் படிப்பதற்கு சோலங்கிக்கி விருப்பம் இல்லை என்றும் வீட்டிற்கு வர விரும்பியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இதற்காக செமஸ்டர் தேர்வு முடிந்தவுடன் அவர் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருவதற்காக ரயில் டிக்கெட் புக் செய்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர் என்றனர்.

சோலங்கி குடும்பத்தினர் சொல்வது என்ன
இதுகுறித்து சோலங்கியின் குடும்பத்தினர் கூறுகையில், எனது மகனின் உடற்கூறாய்வை தங்கள் அனுமதி இல்லாமல் அவசர அவசரமாக செய்து விட்டனர். 7ஆவது மாடியிலிருந்து விழுந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு காயம் இருக்கும். ஆனால் எனது மகனின் பிரேத பரிசோதனைக்கு பிறகு நான் பார்த்த போது அவரது உடலில் காயம் ஏதும் இல்லை. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications