காதலனின் மர்ம உறுப்பு.. புத்தாண்டில் மும்பை காதலி தந்த பரிசு.. கனவில் கூட நினைக்காத சம்பவம்
மும்பை: திருமணத்திற்கு முன்பே இன்றைக்கு ஆண், பெண் இருவருமே சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் அப்படி சேர்ந்து வாழும் போது ஆரம்பத்தில் இன்பமாக இருக்கும் வாழ்க்கை, ஒரு கட்டத்தில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது. இதில் காதலன் அல்லது காதலி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அப்படியே பிரிந்துவிடுவோம் என்று நினைக்கும் போது சிக்கல் ஏற்படுகிறது. அப்படித்தான் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனின் மர்ம உறுப்பை மும்பையில் காதலி இல்லாமல் செய்துவிட்டார்.
இன்றைக்கு பலர் காதலிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காதல் உடல் நெருக்கத்தை தாண்டி, உணர்வு பூர்வமாக, உள்ளப்பூர்வமாக நெருக்கம் ஆவது இல்லை.. வெறும் காமத்தை காதல் என்று புரிந்து கொண்டு சினிமா வசனம் பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எதார்த்தம் என்பது திருமணம் முடிந்த பின்னர் அல்லது திருமணத்தின் போது தான் தெரிகிறது. காதலிக்க எந்த பொறுப்பும் தேவைப்படுவது இல்லை.

ஆனால் நல்ல குணம், நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல படிப்பு, சொத்து, நல்ல குடும்பம் என எல்லா அம்சமும் பொறுந்தினால் தான் திருமணம் சாத்தியம். இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தாலும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் இருக்க வேண்டும். ஆனால் எதையும் புரியாமல் சினிமாவை பார்த்து காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைக்கிறர்கள். ஒரு சிலர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றுகிறார்கள். அப்படி திருமணத்திற்கு மறுக்கும் போது சிக்கல் வருகிறது. மும்பையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதனை ஏற்று காதலனும் சென்றிருக்கிறார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் நெருக்கமான நேரத்தில் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துவிட்டாராம்.
இதில் படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்துள்ளார். அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.. அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications