‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் எங்கே? எந்த தேதியில்? டக்கென சுப்ரியா சுலே சொன்ன வார்த்தை!
மும்பை: இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெறும் என பெரும் விவாதமே நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் நடைபெற்றது. மூன்றவது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.

இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் உள்ள கிராண்ட் ஹையத் ஹோட்டலில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்றும் இன்றும் மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணியின் கூட்டத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் மாநிலங்களில் சீட்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மக்கள் பிரச்னைகள் குறித்து ஊர்வலங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை 'இந்தியா' கூட்டணி முடிவு செய்துள்ளது. கூட்டணியின் முக்கிய முடிவுகளை இந்தக் குழுவே மேற்கொள்ளும். மேலும், பிரசாரம், சமூக ஊடக குழுக்கள் என மொத்தம் 4 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார் மற்றும் கூட்டணிக்கான லோகோவெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமே நடக்கவில்லை. அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் இதுகுறித்து முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
'இந்தியா' கூட்டணியின் அடுத்த கூட்டம் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, டெல்லியில் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, எந்த தேதியில் அடுத்த கூட்டம் என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், அதை எப்போது நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த தேதிகளில் நடத்துவோம் எனக் கூறினார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications