2014ல்தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம்.. 1947-ல் கிடைத்த சுதந்திரம் பிச்சைதான் - கங்கனா ரணாவத்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது; 1947-ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சைதான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பேசியது சர்ச்சையை எற்படுத்தி இருக்கிறது.

கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சிமட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கங்கனா ரணாவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு

கங்கனா ரணாவத் சர்ச்சை பேச்சு

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரணாவத் கூறுகையில்' பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 2047-ம் ஆண்டு கிடைத்தது பிச்சைதான்'' என்று கூறினார். இதனால் காங்கிரஸ் கட்சிமட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி போலீசில் புகார்

ஆம் ஆத்மி கட்சி போலீசில் புகார்

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இ
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் 124A இன் கீழ் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாகி விட்டது.

வாடிக்கையாகி விட்டது.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வாடிக்கையாகி விட்டது. சில தினங்களுக்கு முன்புதான் கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருது கொடுத்தது தவறு என்று பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கங்கனா ரணாவத் இவ்வாறு பேசியது மேலும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

இதில் ஆச்சரியமில்லை

இதில் ஆச்சரியமில்லை

'1947-ல் தங்கள் பிரிட்டிஷ் எஜமானர்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ்ஸால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.2014-ல் உண்மையில் நமது நாட்டின் அடிமைத்தனம் திரும்பியது. இது தான் பாஜக அளித்துள்ள சுதந்திரம். அவர்களின் அடிமைத்தனத்திற்கு எல்லையே இல்லை. அரை நூற்றாண்டு காலம் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை.கங்கனா ரணாவத் அவர்களில் ஒருவர்தான்' என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பண்டிட் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+