மும்பைக்கு வரும் விமானங்கள் உஷார்! சிக்னல் இழப்பு ஏற்பட வாய்ப்பு! விமானிகளுக்கு பறந்த எச்சரிக்கை!
மும்பை: மும்பைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில், விமானப் போக்குவரத்து வழித்தடங்களில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது சிக்னல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று விமானிகளுக்கு நோட்டம் என்ற அவசரக்கால அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இன்று தொடங்கி நவ.17 வரை இந்த பிரச்சனை இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செயற்கைக்கோள் அடிப்படையிலான நேவிகேஷன் அமைப்பில் ஏற்படும் தடங்கல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு விமானிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பை, 'தி இன்டெல் லேப்' என்ற செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு நிறுவனத்தில் பணிபுரியும் புவிசார் நுண்ணறிவு ஆராய்ச்சியாளர் டேமியன் சைமன் தனது X தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது,
"மும்பைக்கு அருகிலுள்ள இந்திய வான்வெளியில் விமானப் போக்குவரத்து வழித்தடங்களை சுற்றியுள்ள பகுதியில் ஜிபிஎஸ் குறுக்கீடு அல்லது இழப்பு குறித்து இந்தியா 'நோட்டம்' எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, டெல்லியைச் சுற்றியும் இதேபோன்ற குறுக்கீடுகள் இருப்பதாக கணிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நவ. 17 வரை இந்த பிரச்சனை இருக்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நோட்டம் எனில், விமானப் பணியாளர்களுக்கான அவசர அறிவிப்பு அல்லது விமானிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு என்று அர்த்தம். விமான நிறுவனங்கள், விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில், ஜிபிஎஸ் செயலிழப்பு குறித்து தெரிய வந்தால் 10 நிமிடத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது நோட்டம் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
டெல்லியில் சில நாட்களுக்கு முன்னர் இந்த பிரச்சனை இருந்தது. இதனை 'ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்' என்று சொல்வார்கள். தவறான சிக்னல்களை அனுப்பி, நேவிகேஷன் அமைப்பை தவறான இடம், வேகம் அல்லது நேரத்தைக் காட்டச் செய்வதாகும். இப்படி நடந்தால் விமானி தவறான திசையில் விமானத்தை திருப்புவார். இதனால் விபத்தும், பெரிய அளவுக்கு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது ஜிபிஎஸ் ஜாமிங்கில் பிரச்சனையிலிருந்து வேறுபட்டது. ஏனெனில் ஜாமிங் என்பது ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் சிக்னல்களைப் பகிர்ந்துகொள்ளும் அலைவரிசையை மட்டுமே தடுக்கும்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications