இந்தியாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் ராணி! யார் இந்தக் குப்தா? என்ன செய்கிறார்?
மும்பை: இந்தியாவிலேயே ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ள முதன் பெண் பற்றி செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் யார்? அவரது பின்புலம் என்ன? என்பது பற்றி நெட்டீசன்கள் தகவல்களை இணையத்தில் தேடி ஆரம்பித்துள்ளனர்.
கார் என்பது பலருக்கு வெறும் வாகனம் அல்ல; அது ஒரு ஆடம்பரத்தின் அடையாளம். ஒரு காலத்தில் மாருதி 800 வைத்திருப்பதே ஒரு பணக்கார சின்னமாகக் கருதப்பட்டது. இன்று விதவிதமான பன்னாட்டு கார்கள் வந்துவிட்டன. இதில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் சொகுசு காரை வைத்திருக்கும் இந்தியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தளவுக்குச் சொகுசு காரை இந்தியாவில் ஒரே ஒரு பெண் தான் வைத்துள்ளார் என்றால் சும்மாவா? யார் அவர்? எவ்வளவு பணக்காரர்? இப்படி ஆயிரம் கேள்விகள் மனதை குடைகிறதா?

இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் மஞ்சள் நிற வண்ண சொகுசு கார் மும்மை நகரத்தில்தான் வலம் வருகிறது. அதற்காக வீடியோ ஒன்று தற்போது யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டதன் மூலம் இப்போது இதை வைத்துள்ள பெண்மணி பற்றியும் நெட்டிசன்கள் தோண்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் மஞ்சள் நிற கார் என்பது ரொம்ப ஸ்பெஷல். அதை வாடிக்காளர்களுக்கு தனித்துவமான அளிக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். நம்ம ஊருக்கு மக்களுக்கு ஐஸ்வர்யா ராய் நடிகையை நேரில் பார்ப்பது என்பதே மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி. அப்படி உள்ளபோது இந்த பிளாக் பேட்ஜ் காரை பற்றி எல்லாம் எழுதிக் கடுப்பேற்றாதீர்கள் என்று சிலர் கண்கலங்கக் கூடும்.
சரி, இந்த காரை வைத்திருப்பவர் அம்பானி அல்ல. நீதி அம்பானி கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பேட்ஜ் புதிய சொகுசு காரில் குடும்பத்துடன் வலம் வந்தார். அது அம்பானி சொத்து. அந்தப் பற்றிய செய்தியை கார்டோக் தளம் வெளியிட்டிருந்தது. ஆனால், இப்போது குறிப்பிட்ட சொல்லப்படும் இந்த எஸ்யூவி கார் மும்பையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் விராத்திகா குப்தாவுக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.
அவர் தனது இந்த மஞ்சள் நிற சொகுசு காரில் வலம்வந்த காட்சியை ஒரு யூடியூப் சானல் வெளியிட்டது. அதன் மூலம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எஸ்யூவியை வைத்திருக்கும் இந்தியாவின் முதல் பெண் விராத்திகா குப்தாதான் என்பது உறுதியாகியுள்ளது. இந்தளவுக்கு ஆடம்பரமான கார் வாங்கும் அளவுக்கு இவர் என்ன தொழில் செய்கிறார்? அதுதானே உங்களது அடுத்த கேள்வி. அடிப்படையில் இவர் ஒரு ஃபேஷன் டிசைனர்.

ஆனால், படிப்படியாக வேறு ஒரு தொழிலையும் தொடங்கினார். சைமன் சியா என்ற இண்டிரீயல் டிசன்ஸ் கம்பெனி ஒன்றை உருவாக்கினார். இது பணக்கார பங்களாக்களின் உள்கட்டமைப்பை வடிவமைப்பு செய்து தருவதில் செல்வாக்கு மிக்க கம்பெனியாக வளர்ந்துள்ளது. இது பற்றி சுருக்கமாகச் சொன்னால் மல்டி பிராண்ட் வீட்டு அலங்கார அங்காடி. பல்வேறு நேர்த்தியான வீட்டு அலங்கார பொருட்களை இங்கே பெறலாம்.
மும்பையில் அமைந்துள்ளது இந்த ஷோரூமில் விற்பனையாகும் பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. விராத்திகாவின் காரும் அவரது வியாபாரத்தைப் போலவே மிகமிக வித்தியாசமானது. இந்தியாவில் இந்த மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் வலம் வரும் ஒரே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் இதுதான். எனவேதான் இந்தச் செய்தி ஹாட் நியூஸ் ஆகியுள்ளது.
இதன் வெளிப்புற பேனல்களில் குரோம் பூசப்பட்டுள்ளன. மேலும் ஃபிரான் கிரில், ஹெட்லேம்ப்கள் என முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் இந்தக் கருப்பு மற்றும் மஞ்சள் கலவை வண்ணம் வாகனத்தின் அழகை மேலும் தூக்கலாக்கித் தருகிறது. ஆகவே இந்த SUV சொகுசு காருக்கு ஒரு ஸ்போர்ட்டி டச் தருகிறது. இந்த வாகனம் ஆடம்பரத்தில் மட்டும் அல்ல; அதில் பொருத்தப்பட அதிநவீன வசதிகளிலும் ஆடம்பரமானது.
இதில் பயணிப்பது ஏதோ விமானத்தில் பறப்பதைப் போன்ற உணர்வைத் தரக்கூடியது. இந்த கார் 6.75 லிட்டர் கொள்ளளவு கொண்டது. மேலும் V12 எஞ்சினை கொண்டுள்ளது. 600 Brake horsepower கொண்ட இந்த கார் 900 Nm முறுக்கும் விசையை தனக்குள் வைத்துள்ளது.
மிக வேகமாக இயங்கும் 8 தானியங்கி கியர்பாக்ஸ் சக்தி பெற்றுள்ள இந்த வாகனம், தரையில் நடமாடும் கப்பலை போன்றது. இதன் விலை சுமார் ரூ.6.95 கோடி முதல் தொடங்குகிறது. அதன் வசதிகளுக்கு ஏற்ப அதன் விலையும் படிப்படியாகக் குறிப்பிட்ட இந்த பிளாக் பேட்ஜ் பதிப்பு காரானது அதிக விலையாகும். அதன் ஆரம்ப விலை சுமார் ரூ.10 கோடி வரை இருக்கலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications