இனி மும்பை- அமீரகம் ஜஸ்ட் இரண்டு மணி நேரம்! கடலுக்கு அடியில் அமையும் பிரம்மாண்ட ரயில் திட்டம்! செம
மும்பை: இந்தியாவையும் ஐக்கிய அமீரகத்தையும் கடலுக்கு அடியில் இயக்கப்படும் ரயில்கள் மூலம் இணைக்கும் ஒரு பிரம்மாண்டத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. காந்த மிதப்பு தொழில்நுட்பத்தில் இயக்கப்படும் இந்த ரயில் மணிக்கு 600 முதல் 1,000 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன் மூலம் மும்பையில் இருந்து வெறும் 2 மணி நேரத்தில் சென்றுவிட முடியுமாம்.
மும்பையில் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, விமான நிலையம் பக்கமே போகாமல் மதியம் உணவை துபாயில் சாப்பிட்டால் எப்படி இருக்கும். நல்ல கதை தான் என உங்களுக்குத் தோன்றும். ஆனால், இது கதை மட்டும் இல்லை. சீக்கிரமே நிஜமாகவும் மாறப் போகிறது. இந்தப் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்தைச் சாத்தியமாக்க முக்கியமான முயற்சி எடுக்கப்படுகிறது.

ரயில்
இந்தியா- ஐக்கிய அமீரகத்திற்கு இடையே மக்கள் பயணிக்கும் முறையே இது மொத்தமாக மாற்றி அமைக்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அமீரகம் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில், அவர்களுக்கும் இது மிக பெரியளவில் உதவும். இந்தத் திட்டம் தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமீரகத்தைச் சேர்ந்த என்ற நேஷனல் அட்வைசர் பியூரோ லிமிடெட் நிறுவனம் தான் இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மும்பை மற்றும் அமீரகம் கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்படும். அதில் ரயில்கள் மகலெவ் அதாவது காந்த மிதப்பு தொழில்நுட்பத்தில் இயக்கப்படும். இதன் மூலம் ரயில்கள் வழக்கமான வேகத்தைக் காட்டிலும் வேகமாக மணிக்கு 600 முதல் 1,000 கி.மீ. வேகத்தில் இயங்கும்.. இதை அவர்கள் டீப் ப்ளு எக்ஸ்பிரஸ் (Deep Blue Express) என்கிறார்கள்
2 மணி நேரமாகக் குறையும்
இப்போது விமானத்தில் செல்ல செக்-இன், செக்யூரிட்டி செக்.. வெளியே பல சோதனைகள் என மொத்தம் 10 மணி நேரம் வரை ஆகும். ஆனால், இந்த டீப் ப்ளு எக்ஸ்பிரஸ் செயல்பாட்டிற்கு வந்தவுடன் பயண நேரம் சுமார் 2 மணிநேரமாகக் குறையுமாம். இதன் காரணமாகவே இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தச் சுரங்கப் பாதையில் பயணிகளை மட்டுமின்றி, சரக்குகளையும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வரும். அதேபோல இங்கிருந்து அமீரகத்திற்குக் குடிநீர் செல்லுமாம். இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையும் அமீரகத்தில் குடிநீர்த் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், இரு நாடுகளின் தேவையையும் இது பூர்த்தி செய்யும்!
செலவு
அதேநேரம் இந்தத் திட்டம் சாத்தியம் தானா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால் இந்தத் திட்டத்திற்கு $50 பில்லியன் பட்ஜெட் தேவைப்படும். உலகில் வேறு எந்தவொரு உட்கட்டமைப்பு திட்டத்திற்குத் தேவையான தொகையை விட இது பல மடங்கு அதிகமாகும். எனவே, இதை லாபகரமாகச் செயல்படுத்த முடியுமா என்பது முதல் கேள்வி!
சாத்தியம் தானா?
மேலும், அரபிக் கடலில் சில பகுதிகளில் 3000 மீட்டர் வரை ஆழம் இருக்கும். அந்தப் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தற்போதைய தொழில்நுட்பத்தால் முடியாத காரியம். எனவே, அதுவும் ஒரு சிக்கல். மேலும், இது ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம் தான்.. இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுகள் இத்திட்டத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை. நேஷனல் அட்வைசர் பியூரோ லிமிடெட் நிறுவனமும் கூட இத்திட்டம் இப்போது தொடக்க நிலையிலேயே இருப்பதாகவும் சாத்தியக்கூறு ஆய்வுகள் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications