5 மாநில எக்சிட் போல் கணிப்பில் பாஜகவிற்கு பின்னடைவு.. பங்குச் சந்தை வீழ்ச்சி
Recommended Video

மும்பை: 5 எக்சிட் போல் முடிவுகள் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே கடும் போட்டி நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், ரூபாய் மற்றும் கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்து காணப்படுகிறது.
5 மாநில சட்டசபை தேர்தல் எக்சிட் போல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியாகின. இதன் தாக்கம், இன்று பங்குச் சந்தை ஆரம்பித்ததுமே எதிரொலித்தது. சென்செக்ஸ் 35169 புள்ளிகளுடன், 503 புள்ளிகள் சரிவை சந்தித்திருந்தது. இது 1.33 சதவீத வீழ்ச்சியாகும். தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, 138 புள்ளிகள் சரிவடைந்து, 10,550 புள்ளிகளாக இருந்தது. இது 1.3 சதவீத சரிவாகும்.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.36 என்ற அளவில் 0.78% வீழ்ச்சியோடு காணப்பட்டது. 10 ஆண்டுகளுக்கான எக்சிட் போல் மட்டுமின்றி அமெரிக்க பங்குச் சந்தை சரிவும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, இயல்பாகவே முதலீட்டாளர்களிடையே பதற்றம் ஏற்பட்டு பங்குகள் விலை குறைவது வாடிக்கை. இப்போது அதற்கான அறிகுறிகள்தான் தென்படுகின்றன.












Click it and Unblock the Notifications