அங்க பாதி.. இங்க மீதி! இந்தியாவில் 2 மாநிலங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரே ரயில் நிலையம் எது தெரியுமா?
மும்பை: இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து முறையாக ரயில்கள் இருக்கிறது. பயணிகள் வசதிக்கு ஏற்ப நாடு முழுக்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவிலேயே இரு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே ரயில் நிலையம் எது தெரியுமா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்தாக ரயில்கள் இருக்கிறது. இதனால் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் ரயில் நிலையம் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதுதான் நவ்பூர் ரயில் நிலையம்.

இரு மாநிலங்கள்
இந்த ரயில் நிலையத்தைக் கேள்விப்பட்டதே இல்லையே என நீங்கள் சொல்லலாம். ஆனால், உண்மையில் இந்தியாவிலேயே இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ள ஒரே ரயில் நிலையம் இந்த நவ்பூர் ரயில் நிலையம் மட்டுமே.. நமது நாட்டில் வேறு எந்தவொரு ரயில் நிலையமும் இதுபோல இரண்டு மாநிலங்களில் இருப்பது இல்லை.
இந்தியா முழுவதும் இப்படி இரண்டு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரே ரயில் நிலையமாக மகாராஷ்டிராவின் நந்தூர்பர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நவ்பூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி இந்த மராட்டிய மாநிலத்தில் அமைந்திருந்தாலும் கூட இன்னொரு பகுதி குஜராத்தின் டாபி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஏன் அப்படி
அது ஏன் இப்படி எந்தவொரு மாநிலத்திலும் முழுமையாக இல்லாமல் நடுவில் கட்டினார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். உண்மையில் இந்த ரயில்வே நிலையம் கட்டப்பட்டபோது, குஜராத் மாநிலம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா மாநிலம், அதாவது அப்போதைய பம்பாய் மாகாணத்திலேயே இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது.
1961 மே 1ம் தேதி பம்பாய் மாகாணம் பிளவுபட்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என இரு மாநிலங்கள் உருவானபோது. நவ்பூர் ரயில் நிலையம் மட்டும் அவற்றின் நடுவே ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றது. இதன் காரணமாகவே இந்த ரயில் நிலையம் பாதி மகாராஷ்டிராவிலும் மீதி குஜராத்திலும் அமைந்துள்ளது.
வேடிக்கை
அதிலும் குறிப்பாக இந்த ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ஒரு பெஞ்ச் பாதி மகாராஷ்டிராவிலும், மீதி பாதி குஜராத்திலும் அமைந்துள்ளது. இது பயணிகளுக்கு ஒரு வேடிக்கையான அனுபவத்தைத் தருகிறது. மேலும் இது ஒரு செல்ஃபி ஸ்பாட்டாகவும் மாறிவிட்டது.
இந்த ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் மகாராஷ்டிராவுக்குச் சொந்தமான பகுதியில் அமைந்துள்ளது. அதேநேரம் ஸ்டேஷன் மாஸ்டர் குஜராத்திற்குச் சொந்தமான பகுதியில் இருந்து செயல்படுகிறர். மேலும், பயணிகளின் வசதிக்காக, இந்த ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் அறிவிப்புகள் இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி என நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.. இதனால் இரு மாநிலங்களிலிருந்தும் வரும் பயணிகளும் தகவல்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
சின்ன ரயில் நிலையம்
இந்த நவ்பூர் ரயில் நிலையம் 800 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது.. அதில் அதிகபட்சமாக 500 மீட்டர் குஜராத் பகுதியில் அமைகிறது. மீதமுள்ள 300 மீட்டர் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் மூன்று நடைமேடைகளும், நான்கு ரயில்வே டிராக்குகளும் உள்ளன. இது சின்ன ரயில் நிலையம் தான் என்றாலும் இப்படி இரு மாநிலங்களுக்கு நடுவே அமைந்துள்ளதால் இது பலரையும் ஈர்க்கிறது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications