மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே...மொபைல் போனால் சிக்கிய கடத்தல்காரர்கள்
மும்பை : புகழ்பெற்ற டிவி ஷோவை பார்த்து சிறுவனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய கொள்ளையர்களை போலீசார் 3 மணி நேரத்தில் பிடித்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையின் புறநகர் பகுதியான மாலத் பகுதியில் ஷேகர் விஸ்வகர்மா (வயது 35) மற்றும் திவ்யன்சு விஸ்வகர்மா (வயது 21) ஆகிய இருவரும் சேர்ந்து, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனை ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு 7.30 மணிக்கு இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

கடத்தப்பட்ட சிறுவனின் தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனின் தந்தைக்கு வந்த போனை டிராக் செய்த போலீசார், மொபைல் போன் சிக்னலை வைத்து, வால்னய் காலனி பகுதியில் பதுங்கி இருந்த கடத்தல்காரர்களை 3 மணி நேரத்திற்குள் கைது செய்து, சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்திய போது, டிவி.,யில் பிரபலமான க்ரைம் ஷோவை பார்த்து தான் இந்த கடத்தல் யோசனை வந்ததாகவும், பல நாள் அப்பகுதியில் நோட்டம்விட்டு கடத்தலில் இறங்கியதாகவும் குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications