அந்த 1 ஓவர்! கடைசி நொடி வரை பரபரப்பு! மிரட்டிய மில்லர்.. தீப்பொறி தீக்சனா! சிஎஸ்கே தோற்றது எப்படி?
மும்பை: 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது. 18வது ஓவரில் நடந்த மாற்றம் காரணமாக சிஎஸ்கே அணி வெல்ல வேண்டிய போட்டியில் வீழ்ந்துள்ளது.
Recommended Video
2022 ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக வருகிறது. இந்த சீசனில் முதலில் தோல்வியுடன் தொடங்கிய சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது.
வரிசையாக 4 போட்டிகளில் வென்று சிஎஸ்கே அணி அதிர்ச்சி அளித்தது. இன்னொரு பக்கம் மற்றொரு சாம்பியன் அணியான மும்பை வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

வெற்றி
இந்த நிலையில் கடந்த போட்டியில் பெங்களூருக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே அணி இன்று எந்த மாற்றமும் இன்றி குஜராத் அணியை எதிர்கொண்டது. குஜராத் அணியில் இன்று கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. தொடையில் மற்றும் அடி வயிற்றில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அவர் ஆடவில்லை. கடந்த போட்டிகளில் நன்றாக ஆடிய ராபின் உத்தப்பா இந்த ஷமி ஓவரில் வெறும் 3 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவுட்
இந்த நிலையில்தான் கடந்த 5 போட்டிகளாக சொதப்பிய ருத்துராஜ் நிதானம் காட்டினார். இன்னொரு பக்கம் மொயின் அலி வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டான நிலையில் ராயுடு நிதானமாக ஆடி வந்தார். முதல் 30 ரன்கள் எடுக்கும் வரை 120 ஸ்டிரைக் ரேட்டை கூட தாண்டாத ருத்துராஜ்.. 30 ரன்கள் கடந்த பின் 220 ரன்கள் ஸ்டிரைக் ரேட்டில் ஆட தொடங்கினார். அடுத்தடுத்து சிக்ஸ் என்று மொத்தம் 5 சிக்ஸ் அடித்தார்.

ருத்துராஜ் அதிரடி
அதேபோல் 5 பவுண்டரி அடித்த அவர் 48 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். மொத்தமாக இவரின் ஸ்டிரைக் ரேட் 173 ஆக இருந்தது. இன்னொரு பக்கம் ராயுடுவும் 31 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 46 ரன்கள் எடுத்தனர். அதன்பின் சிஎஸ்கே அணி ரன் எடுக்க திணறிய நிலையில் கடைசி ஓவரில் மட்டும் ஜடேஜா இரண்டு சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி 20 ஓவரில் 169-5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சந்தேகம்
சிஎஸ்கே அணியின் பவுலிங் கடந்த போட்டிகளில் சரியாக இல்லை. பெங்களூருக்கு எதிராக 200+ ரன்கள் எடுத்தும் கூட சிஎஸ்கே அணியால் அதை டிபன்ட் செய்ய முடியாமல் சிஎஸ்கே கஷ்டப்பட்டு வென்றது. அதனால் இன்று சிஎஸ்கே அணி வெல்லுமா வெல்லாதா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் சிஎஸ்கே அணி முதல் ஓவரில் இருந்தே சிறப்பாக பவுலிங் செய்தது. அதிலும் தீக்சனா தீப்பொரி தீக்சனவாக மாறி குஜராத் அணியை துவம்சம் செய்தார்.

அடுத்தடுத்து விக்கெட்
முதல் ஓவரிலேயே கில்லை முகேஷ் சவுத்திரி டக் அவுட் செய்தார். அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரை தீக்சனா அவுட் செய்தார்.பின்னர் நான்காவது ஓவரில் அபினவ் மனோகர் விக்கெட்டையும் தீக்சனா எடுத்தார். இதனால் குஜராத் அணி மிக கடுமையாக திணறியது. இந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது. முக்கியமாக கடந்த போட்டியிலும், இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு சிறந்த கேம் சேஞ்சராக தீக்சனா இருந்திருக்கிறார். 4 ஓவர் போட்ட தீக்சனா வெறும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட் எடுத்தார்.
.

சாகா
இன்னொரு பக்கம் சாகாவை ஜடேஜா விக்கெட் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இதன்பின்னர் மில்லர் மட்டுமே குஜராத் அணியில் சிறப்பாக ஆடி வந்தார். ஜடேஜா, தீக்சனா , பிராவோ என்று எல்லோரின் ஓவரிலும் அடித்தார். இதனால் எங்கே அவர் ஆட்டத்தை சிஎஸ்கே கையில் இருந்து எடுத்து சென்று விடுவாரோ என்ற அச்சம் நிலவியது. அதிலும் கடைசி 4 ஓவரில் 52 ரன்கள் தேவைப்பட்ட போது மைதானத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது

ரஷீத் கான்
ஆனால் 18வது ஓவரில் அப்படியே ஆட்டம் மாற தொடங்கியது. ஜோர்டன் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸ், பின்னர் ஒரு பவுண்டரி, பின்னர் மீண்டும் சிக்ஸ் கொடுத்தார். ரஷீத் கானின் அதிரடியால் இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் சென்றது. இதனால் ஆட்டம் அப்படியே குஜராத் கைவசம் சென்றது. இதுதான் ஆட்டத்தை மாற்றியது. இதையடுத்து கடைசி 12 பந்தில் 23 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அடுத்த ஓவரிலும் ரஷீத் கான் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

தோல்வி
ஆனால் அடுத்தடுத்து பிராவோ ஓவரில் ரஷீத் கான், அல்ஜாரி ஆகியோர் அவுட் ஆனார்கள். அந்த ஓவரில் 2 விக்கெட் போய், 10 ரன்கள் சென்றது. இந்த நிலையில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த ஓவரை மீண்டும் ஜோர்டன் வீசினார். இதில் ஜார்டான் ஒரு சிக்ஸ், இடையில் ஒரு நோ பால் எல்லாம் கொடுக்க மில்லர் பவுண்டரி, சிக்ஸ் என்று புரட்டி எடுத்தார். மில்லர் மொத்தம் 94 ரன்கள் எடுக்க குஜராத் அணி சிஎஸ்கேவை வீழ்த்தி வென்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications