கழுத்தில் லவ் பைட்.. சுகேஷுடன் நெருக்கமான புகைப்படங்கள்! முதல்முறையாக மவுனம் கலைத்த நடிகை ஜாக்குலின்
மும்பை: ரூ 200 கோடி பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகருடன் தனக்கு இருந்த காதலையும் நெருக்கத்தையும் முதல் முறையாக வெளியிட்டு மவுனம் கலைத்துள்ளார் ஜாக்குலின் பெர்னான்டஸ்.
Recommended Video
இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததை போல பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இவர் பல கோடி ரூபாய் வரை முறைகேடாக பணம் சம்பாதித்ததாக மத்திய அமலாக்கத் துறை பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்லி அமலாக்கத் துறை உயரதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 20 சொகுசு கார்கள், லேப்டாப் மற்றும் ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்தபடியே பல ஒப்பந்தங்களை முடித்து தருவதாக மருந்து நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிகந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டார் அவரிடம் இருந்து 200 கோடி பணத்தை பெற்று மீண்டும் கைதாகியுள்ளார் சுகேஷ்.

பாலிவுட் நடிகை
இந்த நிலையில் பண மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தப்பட்டது. சுகேஷும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்குலினுக்கு சுகேஷ் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில் அந்த காலகட்டத்தில்தான் இரட்டை இலை வழக்கில் சுகேஷ் ஜாமீனில் இருந்தார்.

ரூ 10 கோடி வரை பரிசுகள்
சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ 10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவு்ம தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரூ 500 கோடிக்கு ஜாக்குலினை வைத்து படம் தயாரிப்பதாக அவரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுத்த ஜாக்குலின்
இந்த நிலையில் இத்தனை நாட்களாக போலீஸில் சுகேஷுடனான காதலையும் இதுவரை நடத்திய சந்திப்பையும் ஜாக்குலின் மறுத்துவந்தார். தற்போது ஜாக்குலினும் சுகேஷும் நெருக்கமாக இருக்கும் செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது. ஜாக்குலின் கழுத்தில் லவ் பைட் இருப்பதும் அந்த புகைப்படத்தில் தெரிகிறது.

பகிர வேண்டாம்
இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜாக்குலின் பெர்னான்டஸ், "அந்த புகைப்படத்தை பகிர வேண்டாம். இது எனது பர்சனல், உங்களுக்கு அன்பானவர் ஒருவர் என்றால் இப்படி புகைப்படத்தை பகிர்வீர்களா? எனவே எனக்கும் இதை செய்யாதீர்கள். இந்த புகைப்படத்தை மீடியாக்கள் பகிர மாட்டீர்கள் என நம்புகிறேன். எனக்கு நல்லது செய்வீர்கள், நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன் என இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

மவுனம் கலைத்த ஜாக்குலின் பெர்னான்டஸ்
இந்த புகைப்படத்திற்கான பட வரிகள் எதையும் கொடுக்காமல் வெறும் வேண்டுகோளை மட்டுமே வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளுதல், லவ் பைட், நெருக்கம் உள்ளிட்டவற்றை பார்க்கும் போது இவர்கள் நெருக்கமாக இருந்தது தெரிகிறது. இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் இரு கைகளையும் குவித்தபடி உள்ள எமோஜியை போட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் தற்போது முதல் முறையாக தனது மவுனத்தை ஜாக்குலின் கலைத்துள்ளார். சுகேஷுடன் தான் நெருக்கமான புகைப்படததை வெளியிட்டு விட்டு அதை யாருக்கும் பகிர வேண்டாம் என ஜாக்குலின் கேட்டு கொண்டது ஏன் என தெரியவில்லை. மேலும் இந்த போஸ்டிற்கு ரசிகர்கள் கமென்ட் போடும் ஆப்ஷனையும் ஆஃப் செய்துள்ளார்.

ஜாக்குலினுடன் டேட்டிங்
டிசம்பர் மாதமும் ஜாக்குலினும் சுகேஷும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து அமலாக்கத் துறையினரிடம் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் ஜாக்குலின் மறுத்து வந்தார். ஆனால் சுகேஷோ ஜாக்குலினுடன் தான் டேட்டிங் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். டிசம்பர் மாதம் வைரலான புகைப்படம் டேட்டிங்கின் போது எடுத்தது என்றும் தெரிவிததுள்ளார். ஜாக்குலினுக்கு சுகேஷ் விலை உயர்ந்த பரிசு பொருட்களை அவ்வப்போது காரணமே இன்றி வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications